பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றினால் என்ன பலன் தெரியுமா?
பெரும்பாலான சிவபெருமான் கோவில்களில் பைரவர், பக்தர்களுக்கு வட கிழக்கு மூலையில் இருந்து தான் அருள் பாலிக்கிறார். அதிலும் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி என்பது மிகவும் உகந்த நாளாக உள்ளது. வெள்ளைக்கிழமையில் வரும் அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபட்டால் வீட்டில் லஷ்மி கடாட்சம் நிலைக்கும் என்பது நம்பிக்கை. எனினும் பைரவரை வெவ்வேறு வகையில் மற்ற நாட்களில் வழிபடுவதன் மூலம் நாம் பல அறிய பலன்களை பெற முடியும்.
“எம்மை வணங்கும் பக்தர்களுக்கு நீயும் துணை நின்று வழிநடத்து. அதோடு யார் உன்னை வழிபட்டு வணங்குகிறார்களோ அவர்களுக்கு எந்த தீங்கும் நெருங்காமல் காப்பாற்று.” என இறைவன் சிவபெருமான் பைரவருக்கு அருளாசி வழங்கினார். ஒரு காலகட்டத்தில் சிவாலயங்களில் கோவில் நடை சாத்திய பின்னர், அந்த கோவிலின் சாவியை பைரவரின் கால் பாதத்தில் வைத்து விட்டு செல்லும் வழக்கம் இருந்தது. பைரவருக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இந்த பைரவருக்கு செவ்வாய் கிழமைகளின் மாலை நேரங்களில் மிளகு தீபம் ஏற்றுவது என்பது மிகவும் விசேஷமானது. அதன் மூலம் மீண்டும் நாம் இழந்த செல்வத்தினை பெற முடியும். அதுமட்டுமின்றி வீடுகளில் தேவையில்லா செலவுகள் ஏற்படாமல் இருக்கவும்.. தொழில் ரீதியாகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ வெளிநாடுகளுக்கு சென்று அங்கேயே தங்கி இருப்பவர்கள் இந்த மிளகு தீபம் மூலம் நன்மை அடைவார்கள்.
மேலும் ஒரு சிகப்பு துணியை எடுத்துக்கொண்டு சிறிதளவு மிளகு போட்டு கட்டி வைத்து, நல்லெண்ணெயை அகல் விளக்கில் ஊற்றி, பின் அந்த அகல்விளக்கில் கட்டி வைத்த மிளகு மூட்டையை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். பிறகு பைரவரை மனதார நினைத்து வணங்கிட வேண்டும். இதுபோன்ற நேரங்களில் பைரவர் காயத்ரி மந்திரம் அதை ஜபிப்பது மேலும் சிறப்பு சேர்க்கும்.
அனைத்து வீடுகளிலும் காமாட்சி விளக்கு இருக்கும் காரணம் தெரியுமா?
பைரவ காயத்ரி மந்திரம்
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.
இதை தினசரி குளித்துமுடித்து பூஜை வழிபாட்டின் போது 108 முறை சொல்லலாம். இந்த பைரவ காயத்ரி மந்திரம் நவர்கிரகங்களால் உண்டாகும் தோஷத்தை நிவர்த்தி செய்யும் தன்மை கொண்டது. இந்த மந்திரத்தை உச்சரிக்கும் எண்ணமும் உடலும் சுத்தமாக இருக்க வேண்டும்.
ஸ்லோகம்
ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத் !
முருகப்பெருமானின் சிலையை பெண் வடிவில் கண்டிருக்கிறீர்களா?
அதோடு பைரவருக்கு சிகப்பு நிறங்களில் இருக்கும் பூக்களை சமர்பிக்கலாம் அல்லது பைரவருக்கு பிடித்த அரளிப்பூவை சமர்பித்தால், நினைத்த காரியங்கள் நடக்கும். பைரவரை வணங்கினால் விரோதிகளும் அடி பணிந்து விடுவார்கள். மேலும் முப்பெரும் தெய்வங்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.