Asianet News TamilAsianet News Tamil

Vastu Tips: வீட்டின் பூஜை அறையில் வெள்ளி சிலைகள் வைப்பது சுபமா; வாஸ்து  கூறுவது என்ன?

வெவ்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட சிலைகள் வீட்டின் பூஜை அறையில் வைக்கப்படுகின்றன. அந்த வகையில் வீட்டின் பூஜை அறையில் வெள்ளி சிலைகளை வைத்திருப்பது உங்களுக்கு நல்லதா அல்லது சில தீங்குகளை ஏற்படுத்துமா என்பதை குறித்து இங்கு காணலாம். 

do you know silver idol good for home as per vastu
Author
First Published Jul 11, 2023, 8:37 PM IST | Last Updated Jul 11, 2023, 8:42 PM IST

வீட்டின் பூஜை அறைக்கு சில சிறப்பு வாஸ்து குறிப்புகள் உள்ளன. இது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வீட்டில் உள்ள அனைத்திற்கும் வாஸ்து விதிகளை மனதில் கொண்டு செயல்பட்டால், உங்கள் வீட்டில் சுபிட்சம் நிலவும் என்பது நம்பிக்கை.

அதேபோல பூஜை அறையில் உள்ள சிலைகளுக்கு நேர் திசையும் சில சிறப்பு விதிகளும் உள்ளன. வீட்டுக் பூஜை அறையில் குறிப்பிட்ட அளவிலான சில சிலைகளை வைத்து வழிபடுவது உத்தமம். இந்த விதிகளைப் பின்பற்றுவதன் மூலம், வழிபாடு முழு பலனைப் பெறுகிறது மற்றும் நேர்மறை ஆற்றல் வீட்டில் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதே சமயம் வெள்ளி சிலைகளை வீட்டில் வைப்பது சரியா, வாஸ்து படி அவற்றின் முக்கியத்துவம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. இதுபற்றி பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..

do you know silver idol good for home as per vastu

வீட்டு பூஜை அறையில் வாஸ்து படி வெள்ளி சிலைகளை வைப்பது நல்லதா? 

  • வாஸ்து படி, வெள்ளி சிலைகள் வீட்டிற்கு மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன. அவற்றை வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். வெள்ளி என்பது சந்திரனுடன் தொடர்புடைய ஒரு உலோகமாகும். இது செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாகும்.
  • இது வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், நேர்மறை ஆற்றலையும் கொண்டு வருவதாகவும் நம்பப்படுகிறது. இந்த உலோகச் சிலைகளை வீட்டின் பூஜை அறையில் வைத்து, தொடர்ந்து வழிபட்டால், வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகி, மன அமைதியும் அடைகிறது. 

do you know silver idol good for home as per vastu

வாஸ்துவில் வெள்ளி சிலை வைப்பதன் முக்கியத்துவம்:

  • வீட்டின் பூஜை அறையில் வெள்ளி சிலை வைப்பது சிறப்பு. பூஜை அறையில் சிலை வைக்கும் போது திசையை மனதில் வைத்து, அத்தகைய சிலையை வீட்டின் வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். சிலையின் முகமும் வீட்டின் பிரதான கதவை நோக்கி இருக்க வேண்டும்.
  • இந்த சிலைகளுக்கான திசையை கவனிப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இது அதிக நேர்மறை ஆற்றலை ஈர்க்கிறது மற்றும் வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆற்றல் கிடைக்கும். வெள்ளி சிலைகளில் இருந்து வெளிப்படும் ஆற்றல் வீடு முழுவதும் பரவி வளிமண்டலத்தை உற்சாகப்படுத்துகிறது.
  • வெள்ளி என்பது சந்திரனின் உலோகமாகவும், மனதின் காரணியாகவும் அறியப்படுவதால், இந்த உலோகத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் வீட்டில் உள்ள அனைவருக்கும் மனநல நன்மைகளைத் தருகிறது. 

வாஸ்து படி வீட்டில் வெள்ளி சிலை வைப்பதால் கிடைக்கும் பலன்கள்:

  • நீங்கள் வீட்டின் பூஜை அறையில் ஒரு வெள்ளி சிலையை வைத்திருந்தால் அது செல்வத்தையும், செழிப்பையும் ஈர்க்கிறது. வெள்ளி என்பது செல்வம் மற்றும் செழிப்புடன் தொடர்புடைய ஒரு உலோகம். வீட்டின் பூஜை அறையில் ஒரு வெள்ளி சிலையை வைத்திருப்பது இந்த நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.
  • இது வீட்டில் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வர உதவுகிறது. பூஜை அறையில் வெள்ளி சிலையை வைப்பதன் மூலம் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிக அளவில் அதிகரிக்கும். இது வீட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கிறது. மேலும் வெள்ளி சிலையை வீட்டில் வைத்திருப்பது மிகவும் அமைதியான மற்றும் இணக்கமான சூழலை உருவாக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: குபேரனுக்கு பிடித்த இந்த செடியை வீட்டில் வைத்தால் போதும்.. வீட்டில் செல்வ செழிப்பு பெருகும்..

வாஸ்து படி வீட்டில் வெள்ளி சிலை வைப்பதற்கான விதிகள்:

  • வீட்டின் பூஜை அறையில் வெள்ளி சிலையை வைத்தால், அதை ஒரு தூணில் வைக்கவும், தரையில் நேரடியாக தொடக்கூடாது. 
  • சிலையின் முகத்தை வீட்டின் பிரதான வாசலை நோக்கி வைத்தால் அது உங்களுக்கு மங்களகரமாக இருக்கும். 
  • நல்ல வெளிச்சம் உள்ள பகுதியில் சிலை வைக்க வேண்டும். இந்த சிலையை இருண்ட இடத்தில் வைப்பதை தவிர்க்கவும். 
  • சிலையை சுத்தமாகவும், தூசு படாமல் வைக்கவும், அதனால் நேர்மறையாக இருக்கும். 
  • வாஸ்து படி வீட்டில் ஒரு வெள்ளி சிலை வைப்பதால் பல நன்மைகள் உள்ளன. ஆனால் நீங்கள் மற்ற உலோகங்களின் சிலைகளை வைத்தால் வழிபாடு பலன் தராது என்று குறிப்பிடவில்லை. வெள்ளியைத் தவிர, தங்கம், பித்தளை, செம்பு அல்லது களிமண் சிலைகளையும் வணங்கலாம்.
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios