Asianet News TamilAsianet News Tamil

ஸ்ரீ தேவி தெரியும்... மூதேவி யாருன்னு தெரியுமா?

அதிர்ஷ்டமே இல்லாதவர்கள் என்றும் அவர்கள் இருக்கும் இடத்தில் தரித்திரம் இருக்கும் என்று நினைப்பதால் தான், இந்த வார்த்தையை கெட்ட வார்த்தையாக நினைத்து பயன்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையில், அவர்கள் அப்படி திட்டும் போது மூதேவியை அவர்களை அறியாமலேயே வணங்கி துதிக்கிறார்கள் என்பது தெரிவதில்லை.

do you know about true history about moodevi
Author
First Published Oct 14, 2022, 10:22 PM IST

பொதுவாக நமக்கு கோபம் வந்துவிட்டால், ஏதேனும் தகாத வார்த்தைகளை கூடி மற்றவர்களை திட்டுவதை வழக்கமாக வைத்துள்ளோம். அதிலும் நமது வீடுகளில் பெரும்பாலான மக்கள் திட்டும் பொது மூதேவி என்று கூறுவது உண்டு. அதாவது அவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள், அதிர்ஷ்டமே இல்லாதவர்கள் என்றும் அவர்கள் இருக்கும் இடத்தில் தரித்திரம் இருக்கும் என்று நினைப்பதால் தான், இந்த வார்த்தையை கெட்ட வார்த்தையாக நினைத்து பயன்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையில், அவர்கள் அப்படி திட்டும் போது மூதேவியை அவர்களை அறியாமலேயே வணங்கி துதிக்கிறார்கள் என்பது தெரிவதில்லை.

உண்மையில் இந்த மூதேவி என்பவள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். மூத்த சகோதரியை தான் மூதேவி என்று அழைக்கிறார்கள். அதாவது மூதேவி என்பவள் புராணங்களின்படி மஹாலஷ்மியின் மூத்த சகோதரி. இவளும் லஷ்மி தேவியைப் போல ஆராதிக்கப்பட வேண்டியவள் தான். ஆனால் மற்றவர்கள் எண்ணுவது போல அவள் தீய தெய்வம் அல்ல. உண்மையில் தீமை என்பது என்ன என்பதை எடுத்துக்காட்டி உயிரினங்களை நல் வழிப்படுத்துவதற்காக  விஷ்ணுவினால் தோற்றம் தரப்பட்டவள்.

அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் என்றால் என்ன தெரியுமா?

சமஸ்கிருதத்தில், மூதேவியை ஜேஷ்டா தேவி என்று அழைப்பார்கள். ஜேஷ்டா என்றால், முதல் என்ற பொருள் உள்ளது. தமிழில், இதனை சேட்டை என்று கூறுகின்றனர். தசமகா வித்யாவில், தூமாவதி என்கிற பெயரில், ஒரு தேவியை வணங்கி வருகிறார்கள். அவளை, தூம்ர வாராஹி என்றும், ஜேஷ்டா என்றும் தான் குறிப்பிடுகின்றன. பல்லவர் காலத்தின் தொடக்கத்தில் ஜேஷ்டா தேவி வழிபாடு இருந்துள்ளது. இதனையடுத்து பிற்கால சோழர் காலத்துக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக ஜேஷ்டா தேவி வழிபாடு கைவிடப்பட்டுள்ளது. இருந்தாலும், தமிழகத்தின் வடமாவட்டங்களில் உள்ள பல்லவர் கால மற்றும் சோழர் கால சிவன் கோயில்களில் இன்றும் ஜேஷ்டா தேவி வழிபாடு உள்ளது. ஜேஷ்டா தேவி வழிபாடு செல்வ வளத்தை பெருக்கும் அதோடு, ஆரோக்ய வாழ்வின் முக்கிய தேவையாக உள்ள நிம்மதியான தூக்கத்தையும் தருகிறது என்று கூறுகின்றனர்.

Lashmi Kataksam : லஷ்மி கடாட்சம் தங்க இதை செய்யுங்கள்!!

முன்னரே சொன்னபடி ஜேஷ்டா தேவி மகாலட்சுமியின் மூத்த சகோதிரி. ஒருமுறை நமது இருவரில் யார் அழகு என்று ஸ்ரீதேவிக்கும் ஜேஷ்டா தேவிக்கும் இடையில் சண்டை உண்டாகி விட்டது. இதற்கு தீர்வு சொல்லும் படி இருவரும் நாரதரிடம் கேட்டனர். இங்கு நிஜமாகவே நாரதரோ சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டார். ஒருவேளை லட்சுமி தான் அழகு என்றால், மூத்த தேவிக்கு கோபம் வந்து தன்னுடைய வீட்டிலேயே தங்கி விடுவாளோ என்றும், மூத்த தேவி தான் அழகு என்றால், லட்சுமி  கோபித்து கொண்டு தன் வீட்டை விட்டு வெளியேறி விடுவாளோ என்ற அச்சத்தில் நாரதர் இருந்தார். என்ன செய்வது என தெரியாமல் விழித்து கொண்டிருந்த நாரதர், சிறிது நேரம் யோசிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் விதமாக, எங்கே! இருவரும் சற்று முன்னும் பின்னுமாக நடந்து காட்டுங்கள் என்றார்.

உடனே ஸ்ரீதேவியும் மூத்த தேவியும் நாரதர் முன் ஒய்யாரமாக நடை நடந்தார்கள். சட்டென நாரதர், "ஸ்ரீதேவி வரும் போது அழகு. மூத்த தேவி போகும் போது அழகு!" என்று சொல்ல இரு தேவிகளுக்குமே மகிழ்ச்சி தாங்கவில்லை. இதைத்தான் காலப்போக்கில் இப்படி மாற்றி விட்டார்கள். அவசியம் ஜேஷ்டா தேவியை மனதாரப் பிரார்த்தனை செய்து வழிபட்டால், நிம்மதியும்; நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்; ஐஸ்வர்யங்களையும் அள்ளிக் கொடுப்பாள் ஜேஷ்டா தேவி!

Follow Us:
Download App:
  • android
  • ios