Siddhas : சித்தர்களின் சிறப்பம்சங்கள் பற்றி தெரியுமா??

சித்தி பெற்றவர் என்பதை தான் சித்தர் என்று தெரிவிப்பார்கள். அதாவது சித் என்றால் அறிவு என்றும், சித்தை உடையவர்கள் தான் சித்தர்கள் என்றும், நிலையான பேரறிவு பெற்றவர்கள் என்றும் அழைக்கப்படுகிறவர்கள்.
 

Do you know about the characteristics of Siddhas??

கடவுளை காண நினைப்பவர்கள் தான் பக்தர்கள். ஆனால் அதே கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் தான் சித்தர்கள் என்று தேவாரத்திலே கூறப்பட்டுள்ளது.

சித்தி பெற்றவர் என்பதை தான் சித்தர் என்று தெரிவிப்பார்கள். அதாவது சித் என்றால் அறிவு என்றும், சித்தை உடையவர்கள் தான் சித்தர்கள் என்றும், நிலையான பேரறிவு பெற்றவர்கள் என்றும் அழைக்கப்படுகிறவர்கள்.

சித்தர்கள் தான் மருத்துவம், ஜோதிடம், மந்திரம், யோகம், இரசவாதம் என அற்புதமானவற்றைத் தந்தவர்கள். சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன்படாதவர்களாகவும், இவர்கள் தங்களுக்கென தனி வாழ்வியல் வழிமுறைகளை உருவாக்கி அனைத்தையும் கடந்து இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து வந்தவர்களாகவும் உள்ளனர். இன்றும் நம் கண்களுக்குள் எட்டாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

அட்டாங்க யோகம் அல்லது எட்டு வகை யோகங்களான இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை , தியானம்,சமாதி மூலம் எண் பெருஞ்சித்திகளைப் பெற்றவர்களாகவும், ஆழ்ந்த ஞானம் கொண்டவர்களாகவும், நடப்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் ஆற்றல் உடையவர்களாகவும் சித்தர்கள் இருந்தனர்.

சித்தர்களின் கூற்றுப்படி மனித உடல் 96 தத்துவங்களாகப் பி ரிக்கப்பட்டிருந்தது. அடிப்படையாகக் கொண்டே 96 வகையான நாடித் துடிப்புகளை உணர்ந்து இதன்மூலம் வைத்தியம் செய்யும் வகையையும் குறிப்பிட்டிருந்தார்கள். இதில் ஆன்மாவின் ஆட்சியில் 24 சக்திகள் இருந்ததையும் உணர்ந்தவர்கள். நம் உடலில் 72 ஆயிரம் ரத்தக்குழாய்களும், 13 ஆயிரம் நரம்புகளும், 10 முக்கியத் தமனிகளும், 10 வாயு அமைப்புகளும் கொண்டதாக கண்டறிந்தவர்கள்.

கண்ணனை அழைக்க தயக்கமா.. எப்படி கூப்பிட்டால் கண்ணன் வருவான்!

மேலும் சித்தர்கள், மனித உடலின் நலனுக்கான மருத்துவ முறைகளையும் எழுதி வைத்துள்ளார்கள். மனிதனின் ஆயுட்காலத்தில் 30 ஆண்டுகள் வாயு, 33 ஆண்டுகள் பித்தம்,37 ஆண்டுகள் கபம் என்று பிரித்து கணக்கிட்டார்கள். மனித உடலில் 4448 வியாதிகள் வரக்கூடும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு களிம்புகளை தடவுவதன் மூலமும், உள்ளுக்கு மருந்துகள் கொடுப்பதன் மூலமும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

அதோடு அறுவை சிகிச்சை முறை கையாளப்பட்டது. சித்தர்களின் சிகிச்சை முறையி ல் யோகம், பிராணயாமம் மூலம் மூலிகைகளைப் பயன்படுத்தி கட்டுப்பாடாக வாழ்வது, ஆரம்ப நிலையிலேயே நோயின் வீரியத்தை கண்டறிந்து குணப்படுத்துவது... கடுமையான வியாதிகளின் தீவிரத்தைக்குறைப்பது போன்ற சிகிச்சை முறைகளையும் காணலாம்.

உடலின் உறுதியையும் மன வலிமையையும் காக்க மனதில் தோன்றும் இச்சைகளை அடக்க வேண்டும் என்று மெய்ஞானம் கூறுவது போன்று சித்த சாஸ்திரமும் தெரிவிக்கிறது. உடலை இளமையில் வைத்திருக்கும் ரகசியத்தை கூட சித்தர்கள் அறிந்திருந்தார்கள். வயது முதிர்வு காரணமாக உடல் பாதிக்காமல், மூப்பு அடையாமல், உடல் சுருக்கம் அடையாமல், நரை விழாமல் தங்களை என்றும் 16 ஆக வைத்துக் கொண்டவர்கள் சித்தர்கள். இப்படி பாதுகாத்த உடம்பை இறைவனை அடைய வேண்டிய மார்க்கத்துக்கு பயன்படுத்தினார்கள். காடுகளில், தனிமையில் தவம் புரிந்தார்கள்.

தோஷங்களை நிவர்த்தி செய்யும் அத்ரி மலை..

முக்காலத்தையும் உணர்ந்த ஞானிகளாகவும், அழியாத உடம்பை பெற்றவர்களாகவும், கூடு விட்டு கூடு பாயும் கலையை அறிந்தவர்களாகவும், நினைத்த வடிவை நினைத்தவுடன் எடுக்கும் மாயாஜால வித்தையை உணர்ந்தவர்களாகவும், கடலிலும்மிதப்பவர்களாகவும், நீரிலும் மூழ்கி எழுபவர்களாகவும், உலகத்தை தன் வசம் கொள்ளும் திறனை படைத்தவர்களாகவும் இருந்தவர்கள் சித்தர்கள். ஆனாலும்எதன் மீதும் பற்றற்று இறைவனை மட்டுமே நாடினார்கள். எண்ணிலடங்கா சித்தர்கள் இருந்தாலும் அதி ல் முதன்மை பெற்றவர்கள் 18 பேர் தான்.

சரணாகதியின் மகத்துவம் தெரியுமா?

எண்ணற்ற சக்திகளைத் தனக்குள் அடக்கி உடல் ஆரோக்யத்துக்கு ஜீவநாடியாக அற்புதமான மருத்துவ சிகிச்சையை வெளிக்கொணர்ந்து, பிரபஞ்சத்தையே கட்டி ஆளும் திறமையைக் கொண்டிருந்தாலும்.. காட்டிலும் மலையிலும் குகையிலும் இறைவனின் நாமத்தை ஜெபித்து, வாழுங்காலம் முழுமையும் இறைவனையே தியானித்தவர்கள் சித்தர்கள். இன்றும் திருவண்ணாமலையிலும், சதுரகிரி மலையிலும், கயிலையும் சித்தர்கள் தங்கள் சித்து விளையாட்டை தொடர்ந்தபடி வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்கள். நம் கண்களுக்கு அகப்படாமல்….

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios