நிறம் மாறும் அதிசய லிங்கம் - இங்குதான் உள்ளதா?
“கோவில்களின் நாடு” என்று தான் நம் தமிழகம் அழைப்படுகிறது. அதனால் தான் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புத் தன்மை கொண்டதாகவும் உள்ளது. உதாரணமாக தஞ்சை பெரிய கோவிலின் மிகப்பெரும் சிவலிங்கம், பழனி முருகன் கோவிலின் நவபாஷாண முருகன் சிலை போல் சில கோவில்களின் மூலத் திருவுருவச் சிலைகளின் மகத்துவம் காரணமாக, அக்கோவில்கள் புகழ் பெற்று விளங்குகின்றன. அப்படியான ஒரு புகழ் பெற்ற கோவில் தான் “ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில்”. சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் வழியில் உள்ள தென்பொன்பரப்பி என்ற பகுதியில் அமைந்துள்ளது.
1000 ஆண்டுகளும் மேல் பழமை வாய்ந்த இக்கோவிலை, முற்காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த “வாணகோவராயன்” என்னும் மன்னன் கட்டியதாக கூறப்படுகிறது. பஞ்சபூதத் தல கோவில்களுக்கு இணையானதாக இக்கோவில் சிவவழிபாடு புரிவோர்களால் கருதப்படுகிறது. எனவே, இக்கோவிலின் கருவறை மிகவும் உயிர்ப்புத்தன்மைக் கொண்டதாக இருப்பதால், இக்கோவிலின் கருவறையில் தீபம் ஏற்றப்படும் போது, அத்தீபத்தின் சுடரொளி அசைந்து கொண்டே இருப்பது, இத்தல இறைவனின் சக்தியின் மேன்மைக்குச் சான்றாகும்.
சித்தர்களின் தலைமை குருவாகக் கருதப்படும் “காகபுஜுண்ட” சித்தர் இங்கு 16 ஆண்டு காலத் தவம் புரிந்ததால் அவரின் தவத்தை போற்றுவதற்கு, சிவபெருமான் சூரிய காந்தக் கல்லாலான சிவலிங்கத்தை காகபுஜுண்ட சித்தருக்கு தந்தார். அச்சிவலிங்கம் தான் இக்கோவிலின் மூலவரான “சூரிய காந்தக் கல்” சிவலிங்கமாக உள்ளது. பால், தேன், சந்தானம் போன்ற பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்கையில் இங்குள்ள சிவலிங்கமானது நிறம்மாறும் அதிசயத்தை யார் வேண்டுமானாலும் காணலாம். இக்கோவிலுக்கு அருகிலேயே காக புஜுண்ட சித்தரின் சமாதி என்று கருதப்படும் இடத்தில் அவருக்கு வழிபாடும் நடைபெறுகிறது.
Kantha Sasti Kavasam : கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்
இப்பூமியில் எத்தனையோ வகையான ரத்தினக்கற்கள் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட கற்களில் சிலவற்றை “நவரத்தினங்களாக” நாம் பயன்படுத்தி வருகிறோம். அப்படிப்பட்ட கற்களின் வரிசையில் ஒரு விஷேஷ சக்தி வாய்ந்தக் ஒரு கல் இந்த “சூரிய காந்தக் கல்”. இக்கல்லை நம் உடலில் படும்படி அணிவதால் நம் உடலிலுள்ள ஏழு சக்கரங்கள் தூய்மையடைந்து, நாம் ஆன்மிக வாழ்வில் முன்னேற உதவிபுரியும். அப்படிப்பட்ட சக்திவாய்ந்த ஒற்றைக் கல்லாலான இந்த சூரிய காந்தக் கல் சிவலிங்கத்தை நாம் வழிபடுவதால் நாமும் நம் கர்ம வினைகள் நீங்கி முக்தியடையும் நிலையை பெறலாம். அதோடு திருமணத் தடை, கடன் தொல்லை, நோய்கள், கல்வியில் மந்த நிலை போன்ற குறைகளும் நீங்கும்.
யாருக்கு சர்ப்ப தோஷம் தாக்கும்.. அதற்கான பரிகாரங்கள் என்ன?
ஆவணி பௌர்ணமி அன்றும், பங்குனி உத்திரம் அன்றும் காலை 6 மணியிலிருந்து 7.30 வரை சூரியனின் கதிர் கள் இங்குள்ள பால நந்தியின் கொம்புகள் வழியாக மூலவரின் மீது படும் காட்சியைத் தரிசிக்கலாம். இந்த தென்பொன்பரப்பி ஸ்வர்ணபுரீஸ்வரர் சிவன் கோவிலின் நடை காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கிறது. ஆதலால் நடை சாற்றப்படுவதைப் பற்றி கவலைப்படாமல் எப்போது வேண்டுமானாலும் இக்கோவிலுக்குச் சென்று தரிசிக்கலாம்.