Vastu Tips: கடிகாரத்தை ஒருபோதும் இந்த திசையில் மட்டும் வைக்காதீங்க..! பிரச்சனைகள் அதிகரிக்கும்..!!
கடிகாரம் உங்கள் வீட்டில் உள்ள பிரச்சினைகள் அனைத்தையும் நீக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே, கடிகாரத்தைப் பற்றி வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று இங்கே பார்க்கலாம்..
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் பொருட்களை சரியான திசையில் வைப்பது மிகவும் முக்கியம். ஒருவேளை நீங்கள் சரியான திசையில் வைக்கவில்லை என்றால், வாஸ்து தோஷம் ஏற்படலாம். அந்த வகையில், வாஸ்து படி, உங்களது வீட்டில் கடிகாரம் சரியான திசையில் இருப்பது மிகவும் முக்கியம். கடிகாரம் தவறான திசையில் இல்லையென்றால் நிதி பிரச்சனை, மன மற்றும் உடல் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே, கடிகாரங்களைப் பற்றி வாஸ்துசாஸ்திரம் என்ன சொல்கிறது என்று இங்கு பார்ப்போம்..
உங்கள் வீட்டில் இருக்கும் கடிகாரம் சரியான திசை மற்றும் சரியான இடத்தில் இருந்தால், அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை சரியான திசையில் கொண்டு வரும். மேலும் கடிகாரத்தின் திசை மட்டுமல்ல நிறம் மற்றும் வடிவமும் முக்கியம் தான். எந்த திசையில் எப்படி கடிகாரத்தை அமைப்பது என்பதை அறிந்து கொள்வோம்.
இதையும் படிங்க: மயில் தோகை கொண்டு இந்த பரிகாரங்கள் செஞ்சி பாருங்க.. அப்போ நடக்குறத நீங்களே பாருங்ளே..!!
- கிழக்கு திசையில் வைக்கப்படும் கடிகாரம் மங்களகரமானது. வடக்கு திசையில் வைக்கப்படும் கடிகாரமும் நல்ல பலனைத் தரும்.
- கடிகாரத்தை மேற்கு திசையில் வைக்கக் கூடாது. ஒருவேளை அங்கு வைக்க வேண்டும் என்றால், கடிகாரம் வட்டமாக இருக்க வேண்டும்.
- கடிகாரத்தை எந்த சூழ்நிலையிலும் தெற்கு திசையில் வைக்க கூடாது. இந்த கடிகாரம் உங்களுக்கு மோசமான நேரத்தைக் கொண்டுவருகிறது மற்றும் வீட்டில்/அலுவலகத்தில் பிரச்சனைகளை அதிகரிக்கிறது.
- கடிகாரத்தை ஒருபோதும் கதவுக்கு மேல் வைக்கக்கூடாது. கடிகாரத்தை ஒருபோதும் அணைத்து வைக்க வேண்டாம். எப்போதும் சரியான நேரத்தில் வைத்திருங்கள். ஊசிகளை நேரத்திற்கு முன்னும் பின்னும் வைக்கக் கூடாது.
- உடைந்த கைக்கடிகாரத்தை வீட்டில் வைக்கக் கூடாது. உடைந்த கடிகாரம் வீட்டின் வளிமண்டலத்தை கெடுத்துவிடும். உடைந்த கடிகாரம் துரதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
- வெளிர் நிற கடிகாரத்தை வீட்டில் வைக்க வேண்டும். அடர் நிற கடிகாரத்தை அணிவது வீட்டில் எதிர்மறையை கொண்டு வரும்.