தெய்வங்களை வசியமாக்க முடியுமா? தூய்மையான எண்ணத்தோடு இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்!

முற்பிறவி செய்த பாவமோ இப்பிறவி செய்த பாவமோ எனக்கு தெய்வத்தின் அனுகூலம் கிடைக்கவில்லை என்று சொல்பவர்களை பார்க்கலாம். சிலருக்கு பித்ரு தோஷமோ அல்லது தெய்வங்களின் அனுகூலமோ கிடைக்காமல் போகலாம்.
 

chant this mantras to get attracted by god

முற்பிறவி செய்த பாவமோ இப்பிறவி செய்த பாவமோ எனக்கு தெய்வத்தின் அனுகூலம் கிடைக்கவில்லை என்று சொல்பவர்களை பார்க்கலாம். சிலருக்கு பித்ரு தோஷமோ அல்லது தெய்வங்களின் அனுகூலமோ கிடைக்காமல் போகலாம்.

தெய்வ அனுகூலம் கிடைக்காத நிலையில் வீட்டில் எப்போதும் பொருளாதர பிரச்னை, குடும்பத்தில் நிம்மதியின்றி இருப்பது, ஆரோக்கிய பிரச்னை என ஒருத்தர் மாற்றி ஒருவருக்கு பல பிரச்சனைகள் ஏற்படும். இப்படியான துன்பங்களை எதிர்கொள்ளும் போது குலதெய்வத்துக்கு பூஜை போட்டு சில பரிகாரங்களை  செய்வது அவசியம்.

நமது துன்பங்கள் விலக வேண்டுமென்றால் குலதெய்வத்தின் பார்வை நம்மீது படவேண்டும். அதன் பிறகு இஷ்ட தெய்வத்தின் அருளை பெற மந்திரங்கள் சொல்வது பலனை அளிக்கும். ஆனால் ஒவ்வொரு தெய்வத்துக்குமான மந்திரங்களை தனித்தனியாக சொல்வதும்  நாம் நினைவில் கொள்வது சிரமமாக இருக்கும். அதனால் எல்லா  தெய்வங்களின் அருள் பார்வை பெறுவதற்கு இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்.

நந்தியே இல்லாமல் இருக்கும் லிங்கம்.. எங்கு தெரியுமா?

ஓம் ஒங்கராய நமசிவாய
ஓம் நகாராய நமசிவாய
ஓம் மகாராய நமசிவாய
ஓம் சிகாராய நமசிவாய
ஓம் வகாராய நமசிவாய
ஓம் யகாராய நமசிவாய
ஓம் நம ஸ்ரீ குரு தேவாய பரமபுருசாய சர்வதேவதா வசீகனாய சர்வாரிஷ்ட விநாசாய சர்வ துர் மந்திர சேதனாய திரிலோக்ய வசமானய சுவாஹா

தினமும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். காலையில் எழுந்து பல் துலக்கி உடல் சுத்தம் செய்து கிழக்கு  முகம் பார்த்து அகல் விளக்கு ஏற்றி  மனதை ஒருமுகப்படுத்தி உட்கார வேண்டும்.  பிறகு இந்த மந்திரத்தை 12 முறை உச்சரிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மண்டலம் இந்த மந்திரத்தை  உச்சரித்து வந்தால்  துன்பங்கள் அனைத்தும் நீங்கும். வாழ்வில் ஒளி சிறக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios