யாருக்கெல்லாம் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும்? அதற்கான பரிகாரம் என்ன?
ஒருவருக்கு பிரம்மஹத்தி தோஷம் எப்படி வருகிறது தெரியுமா? என்ன பரிகாரம் செய்தால் இந்த தோஷம் நீங்கும் என்பதை இப்பதிவின் மூலம் காணலாம்.
ஜாதகம் என்பது இந்து மதத்தில் பின்பற்றப்படும். ஜாதகப்படி ஒருவருக்கு வெவ்வேறு வாழ்க்கை முறை அமைகிறது. சிலர் இது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இருக்காது ஆனால் சிலர் அது வாழ்க்கையை பார்த்தால் முன்னேற்றம் என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது. இதற்கு அவர்களின் ஜாதகத்தில் இருக்கும் தோஷம் தான் காரணம். தோஷங்களில் பலவகை உண்டு. அந்தவகையில் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்குக் காரணம் பிரம்மஹத்தி தோஷம் தான்.
பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுவது ஏன்?
பிரம்மன் படைத்த ஒரு உயிரை எடுப்பது, வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பை கொள்வது மேலும் பொன் பொருளுக்கு ஆசைப்பட்டு ஒரு உயிரை கொள்வது, வயதான காலத்தில் பெற்றோர்களை கவனிக்காமல் இருப்பது, அவர்களுக்கு உணவளிக்காமல் அவமானப்படுத்துவது, பசு வதைப்பது நம்பிக்கை துரோகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கும். குறிப்பாக விஷ்ணு ராம அவதாரம் எடுத்தபோது ராவணனை கொன்றதால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது நான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
விளைவுகள்:
பிரம்மஹத்தி தோஷம் ஒருவருக்கு இருந்தால் அவரது வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. இவர்களுக்கு உரிய வயதில் திருமணம் நடக்காத அப்படி நடந்தாலும் திருமண வாழ்வில் நிம்மதி இருக்காது. மேலும் இவர்கள் அதிகம் சம்பாதித்தாலும் இவர்களது கையில் பணம் தாங்காது. குறிப்பாக இவர்களுக்கு சமூகத்தில் நல்ல மதிப்பு கிடைப்பது கடினம். வாழ்க்கை முழுவதும் இவர்கள் பிரச்சனைகளையே சந்திப்பார்.
இதையும் படிங்க: இன்று பிரதோஷம்! இந்த 5 எழுத்து மந்திரம் உச்சரித்தால் சிவனருள்!! புதன்கிழமை பிரதோஷத்திற்கு இத்தனை சிறப்புகள்!
பரிகாரம்:
- பிரம்மஹத்தி தோஷத்திற்கு குலதெய்வத்தை முதலில் வணங்கி பின் ராமேஸ்வரம் கங்கை காசி உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் நீராடி இறைவனை வணங்கி வரவும்.
- வயதான ஏழு தம்பதிகளுக்கு வயிறார உணவளித்து, புதிய ஆடை வாங்கி கொடுத்து அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.
- மிகவும் பழமையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்ச கூட்டு எண்ணிக்கொண்டு விளக்கேற்றி வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
- உங்களால் முடிந்தவரை ஏழைகளுக்கு உதவி செய்து கொண்டு இருங்கள். மேலும் தினந்தோறும் ஒரு பசு மாட்டிற்கு பசுமையான அருகம்புல் மற்றும் சுத்தமான தண்ணீரை வைக்க வேண்டும்.
- சிவன், பிரம்மா, விஷ்ணு இவர்கள் மூவரும் இருக்கக்கூடிய திருத்தலங்களுக்கு அடிக்கடி சென்று வழிபாடு செய்வது தோஷத்திற்கான தாக்கத்தை குறிக்கும்.