தேர் இழுப்பதன் ரகசியம் பற்றி தெரியுமா..? தேர் இழுப்பதினால் இத்தனை நன்மைகளா..?

தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டு தேர் இழுப்பதினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்..

benefits of chariot pulling in festivals  in tamil mks

தேர் இழுப்பதினால் கிடைக்கும்  நன்மைகளை அறிந்து கொள்வதற்கு முன்பு, ஒரு சிறிய கதை மூலம் இந்த கட்டுரையைத் தொடங்கலாம்...நிலக்கிழார் ஒருவர் சொத்து தகராறில் மன அமைதியை இழந்து தவித்த சமயத்தில், காஞ்சி மகாபெரியவரை தரிசித்தார். அவருடைய மனவேதனைகளை உணர்ந்த பெரியவர் அவரிடம் "தேர் இழுத்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு நிலக்கிழார் இல்லை என்றார்.

ஒரு முறை தேர் இழுத்துவிட்டு, பிறகு உங்கள் வேலையை செய்யுங்கள் எல்லாம் நன்றாக முடியும் என்று சொல்லி நிலக்கிழாரை ஆசீர்வதித்தார் மகா பெரியவர். மூன்று மாதங்கள் கழித்து மகிழ்ச்சி பொங்க பெரியவரை சந்தித்த நிலக்கிழார், தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்ததாகவும், இனி தர்மம் ஒருபோதும் தோற்பதில்லை என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது என்றார் நிலக்கிழார். அதற்கு பெரியவர் தேர் இழுத்தாயோ என்று கேட்க, ஆம்.. அதன்பிற்கு தான் இப்படி தனக்கு எல்லாம் நடந்தது என்றார் நிலக்கிழார்.

தேர் இழுப்பது ஏன்?
தேர் என்பது நடமாடும் கோயில் என்று சொல்வார்கள். வயதானவர்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் கோவிலுக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் தேர்த்திருவிழா அன்று இறைவனைக் காண முடியும். 

பொதுவாகவே, தெய்வசக்தியானது கோவிலில் எப்போதுமே வெளிப்படும். ஆனால், தேர்த்திருவிழா அன்றோ தெய்வ சக்தியானது ஊர் முழுவதும் வெளிப்படும். இதனால் ஊருக்குள் இருக்கும் தீய சக்திகள் அனைத்தும் விலகி ஓடும். உங்களுக்கு தெரியுமா.. தேர் இழுப்பவர்களிடம் பேதங்கள் கிடையாது. எல்லாவற்றிலும் பேதங்கள் பார்க்கும் மனிதர்களை 
தம் பக்கம் இழுக்க முடியும் என்பதை உணர்த்துவது தான் தேரோட்டம்.

தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும், தேர் இழுப்பதற்கும், தேரோட்ட திருவிழாவுக்கு உதவி செய்வதற்கும் கொடுத்து வச்சியிருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். முக்கியமாக, பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே தேர்த்திருவிழாவில் கலந்து கொள்ள முடியுமாம். தேர் இழுக்கும் போது மக்கள் பக்தியுடன் இழுப்பதால், தெய்வத்தை இழுப்பதாக மக்கள் கருதுகிறார்கள். அதுமட்டுமின்றி, பக்தர்களின் பக்திப் பெருக்கைக் கண்டு தெய்வம் அவர்களிடம் ஓடி வரும். இதுதான்  தேர்த்திருவிழாவின் மகத்துவம் ஆகும். 

இதையும் படிங்க: லிங்கத்தில் இருந்து வெளிப்படும் நண்டு.. தமிழ்நாட்டில் இருக்கும் இந்த அதிசய கோயில் பற்றி தெரியுமா?

நிலக்கிழார் முதலில் தேர்த்திருவிழாவில் கலந்து கொள்ளாமல் போவதற்கு அவரது கர்மவினையே காரணமாகும். அதன்பிறகு அவர் ஒரு மஹானை தரிசித்ததை அடுத்து, அவரது பாப வினைகள் நீங்கியது மட்டுமின்றி,  தேர்த்திருவிழாவிலும் அவர் கலந்துகொண்டார். அதனால் தான்  கடவுளின் அருள் அவருக்கு கிடைத்து, அவருக்கு வழக்கு சாதகமாக முடிந்தது.

இதையும் படிங்க: Palani Murugan Temple: பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்! 3 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்.!

தேர்த்திருவிழாவில் கலந்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்:

  • கடவுளின் அருள் கிடைக்கும்
  • செய்யும் காரியத்தில் வெற்றி உண்டாகும்
  • தீராத நோய்களும் தீரும்
  • பாவ வினைகள் தீரும்
  • வழக்கு சம்பந்தமான பிரச்னைகள் அனைத்தும் அகலும்.
  • மனக்குழப்பங்கள் நீங்கி, நிம்மதி கிடைக்கும்.
  • சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

எனவே, இத்தனை நன்மைகள்  தரக்கூடிய தேர்த் திருவிழாவில் கலந்து கொள்ள தவறாதீர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios