Asianet News TamilAsianet News Tamil

கற்பூரம் மற்றும் கிராம்புகளை இப்படி யூஸ் பண்ணுங்க.. அப்புறம் பாருங்க உங்க வீட்ல நடக்கிற மாற்றத்தை!!

கற்பூரம் மற்றும் கிராம்புகளை வீட்டில் எரிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

benefits of burning camphor and cloves in the house as per vastu in tamil mks
Author
First Published Oct 10, 2023, 4:33 PM IST

பணம் என்பது உலகம் முழுவதும் சுழலும் ஒன்று. பணம் உங்களுக்கு அமைதியையும், மனநிறைவையும், தேவையையும் பூர்த்தி செய்வதாக உள்ளது. இது இன்றைய கால கட்டத்திற்கு அத்தியாவசிய ஒன்று. 

பணம் என்றால் பிணம் வாயைப் பிளக்கும் என்ற கால கட்டத்தில் இருந்து வருகிறோம். பணம் அனைவருக்கும் கிடைக்கிறதா என்றால் இல்லை. ஒருவரின் உழைப்பு, உத்தியோகத்தை பொருத்து அமைகிறது. பணம் கிடைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். சின்ன சின்ன பரிகாரங்கள் செய்து லட்சுமி தேவியை நமது வீட்டுக்கு வர வைக்க முடியும்.

நிதி, தொழில்முறை சிக்கல்கள்:
எப்போதாவது எழும் நிதி மற்றும் தொழில் சார்ந்த பிரச்சனைகளை கற்பூரம் மற்றும் கிராம்பு என்ற இரண்டு சமையலறை பொருட்களால் சரி செய்ய முடியும். இவை சமையலறையிலும் பூஜை அறையிலும் இரண்டு மடங்கு பயன்களைக் கொண்டுள்ளன.

இதையும் படிங்க:  வாஸ்து படி வீட்டில் இந்த இடங்களில் கற்பூரத்தை வையுங்க...உங்க 'கல்லா' நிரம்பி வழியும்...!!

சில தெய்வங்களுக்கு, மக்கள் பல்வேறு காரணங்களுக்காக கிராம்புகளால் தீபம் ஏற்றுகிறார்கள். கற்பூர ஆரத்தி நிச்சயமாக நித்திய விருப்பமானது மற்றும் வழிபாட்டு முறைகளில் அவசியம். எனவே, சிறந்த பலன்களைப் பெற இந்த இரண்டு பொருட்களையும் வீட்டில் சேர்த்து எரிக்கவும்.

இதையும் படிங்க:  கண் திருஷ்டியா? இவற்றை நீக்க.. சமையலறையில் இருந்து "இந்த" ஒரு மசாலா போதும்...!!

வேலைக்கான நேர்காணலில் வெற்றி பெற:
நீங்கள் தேடிக்கொண்டிருந்த ஒரு நிறுவனத்தில் நேர்காணலுக்கு செல்லும்போது, அதில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உங்கள் விருப்பத்தை அடைய வீட்டில் இருந்து புறப்படும்போது இரண்டு கிரம்புகளை வாயில் போட்டுக் கொண்டு செல்லவும். நேர்காணல் நடைபெறும் இடத்தை அடைந்ததும், கிராம்புகளை வெளியே துப்பிவிடவும். நேர்காணலுக்கு உள்ளே நுழையும் போது உங்களுக்கு பிடித்த கடவுளை தியானியுங்கள். இந்தப் பரிகாரம் உங்களுக்கு வேலையை உறுதி செய்யும், நேர்காணலில் வெற்றியைக் கொடுக்கும். 

செல்வந்தராக வேண்டுமா?

  • நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் மேம்படுத்த விரும்பினால், கற்பூரத்தை இப்படி பயன்படுத்துங்கள். ஒரு ரோஜா பூவின் அருகில் கற்பூரத்தை வைக்கவும். பிறகு கற்பூரம் ஏற்றி, செம்பருத்தி பூவை துர்க்கை தேவியின் பாதத்தில் வைக்கவும். இப்படி செய்தால் செல்வம் பெருகும்.  
  • இரவில் கற்பூரத்தையும் கிராம்புகளையும் சேர்த்து எரியுங்கள். உங்கள் பணப்பை எப்போதும் நிறைந்திருக்கும். கற்பூரத்தில் விருப்பத்தை நிறைவேற்றும் தெய்வீக சக்தி உள்ளது. 
  • பிரார்த்தனைகளுடன் உங்கள் விருப்பங்களை தெரிவித்த பிறகு நீங்கள் கற்பூர ஆரத்தி செய்தால், உங்கள் விருப்பம் நிச்சயமாக நிறைவேறும்.

எதிர்மறை ஆவிகள்:
கற்பூரம், கிராம்பு மற்றும் ஏலக்காய் மூன்றும் தீய சக்திகளை விரட்டும். இதற்கு ஒரு கற்பூரம், ஒரு பச்சை ஏலக்காய் மற்றும் ஐந்து கிராம்புகள் தேவை, அவற்றை ஒரு பாத்திரத்தில் வைத்து எரிக்கவும். முதலில் இதை பூஜை அறைக்கு எடுத்துச் செல்லுங்கள், பின்னர் அதை உங்கள் வீட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்லுங்கள். இப்படி செய்தால் வீட்டில் ஏதாவது ஆவி போன்ற எதிர்மறை இருந்தாலும் நீங்கிவிடும். அமைதி நிலவும்.

திருஷ்டி கழித்தல்: 
கற்பூரம் எதிர்மறை ஆற்றல்களை வெற்றிகரமாக விரட்டுகிறது. வீடு அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது ஏதேனும் திருஷ்டி இருந்தால், வீட்டில் கற்பூரம் மற்றும் கிராம்பு எரிப்பதன் மூலம் இது தீரும். இவ்விரண்டையும் எரிப்பதனால் நோயுற்றவரின் உடம்பில் இருந்து நோயை விரட்டலாம். இதனால் அவரது ஆரோக்கியம் மேம்படும்.

காற்றை சுத்திரிகரிக்கும்:
கற்பூரம் வீட்டில் நறுமணத்தை பரப்பும். மேலும் வளிமண்டலத்தைச் சுத்தப்படுத்துவதோடு, கொசுக்களைத் தடுக்கிறது.

திருமண வேறுபாடுகள்:

  • கற்பூரத்தை வீட்டில் வைத்திருப்பது தம்பதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள தவறான புரிதல்கள் மற்றும் வாக்குவாதங்களை தீர்த்து வைக்கும். கற்பூரம் மனதைத் தெளிவுபடுத்துகிறது. எனவே மோதல்களின் வாய்ப்பைக் குறைக்கிறது. 
  • திருமணக் குழப்பங்கள் தீர்வதற்கு தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் பித்தளை கிண்ணத்தில் கற்பூரம் ஏற்றவும். நீங்கள் அறையின் மூலைகளில் இரண்டு கற்பூரத்தை வைத்து எரிக்கவும். இது சண்டையிடும் தம்பதிகளிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். 
  • இரவில் கற்பூரம் மற்றும் கிராம்புகளை எரிப்பதால் தடைகள் நீங்கும். காரியம் வெற்றி பெறும். அதுபோல் ஆறு கற்பூரத் துண்டுகளும் 36 கிராம்புகளும் எரித்தால் திருமணத் தடை நீங்கும். 
  • சமையலறையில் வாஸ்து தோஷம்: உங்கள் சமையலறையில் வாஸ்து தோஷம் இருந்தால், ஒரு வெள்ளி கிண்ணத்தில் சிறிது கிராம்பு மற்றும் கற்பூரத்தை எரிக்கவும். இதை தினமும் செய்து வந்தால், லட்சுமியின் அருள் எப்போதும் உங்கள் வீட்டில் இருக்கும், பணத்திற்கு பஞ்சம் வராது.

எதிர்மறை ஆற்றலை வெளியேற்றும்:
கற்பூரம் அல்லது படிகங்களை குளியலறையில் அல்லது பிரதான கதவுக்கு அருகில் வைத்திருப்பது தீய சக்திகளை வெளியேற்றும். இது வாஸ்து தோஷத்தை நீக்குகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எலுமிச்சை, கிராம்பு:
ஒரு எலுமிச்சையின் உள்ளே ஐந்து கிராம்புகளை வைத்து, பின் அனுமன் மந்திரத்தை 21 முறை சொல்லவும். மந்திரத்தை ஓதி முடித்த பிறகு, எலுமிச்சையை உங்கள் பணப்பையில் எடுத்துச் செல்லுங்கள். பணியில் இடத்தில் உங்களது மதிப்பு உயரும். அதுபோல், ஒரு விளக்கில் இரண்டு கிராம்பு மற்றும் கடுகு எண்ணெய் சேர்க்கவும். காலையில் விளக்கேற்றி இறைவனை பிரார்த்தனை செய்துவிட்டு நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள். பணியில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி வேலை கிடைக்கும். 

கற்பூரம் மற்றும் கிராம்பு எரிப்பது எப்படி?
ஒரு சிறிய துண்டு கற்பூரம், நான்கைந்து கிராம்புகளை எடுத்து ஒரு ஸ்பூன் அல்லது கிண்ணத்தில் வைத்து எரிக்கவும். கற்பூரம் ஏற்றும் போது கவனமாக இருங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios