பழனியில் ரோப்கார் சேவை இன்று முதல் நிறுத்தம்;
பழனியில் ரோப்கார் சேவை இன்று முதல் நிறுத்தப்படுகிறது.
அறுபடை வீடுகளில் 3வது வீடான பழனி முருகன் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது உண்டு. தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள்.
இவ்வழியாக வரும் பக்தர்கள் முக்கியமாக படிக்கட்டு பாதை மற்றும் யானைப்பாதையையே பயன்படுத்துகின்றனர். மலையடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்ல ரோப்கார் மற்றும் மின்சார இழுவை ரயில் சேவைகளும் உள்ளன. விரைவாக சென்று இயற்கை அழகை ரசிக்க முடியும் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்காரை விரும்புகின்றனர். பழனியில் ரோப்கார் சேவை தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படுகிறது. ரோப்கார் நிலையத்தில் மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
இதையும் படிங்க: வாழ்வில் ஏற்றம் தரும் சக்திவாய்ந்த முருகன் கோயில்.. இங்கு சென்றால் பதவி உயர்வு கிடைக்குமாம்..
ஆண்டு பராமரிப்பு:
அதேபோல், ரோப்காரில் மாதம் ஒரு முறையும், ஆண்டுக்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பின்னர் அதன் சேவை பொதுவாக நிறுத்தப்படும். இந்த பராமரிப்பு பணியின் போது கயிறு பெட்டிகள் அகற்றப்பட்டு சரி செய்யப்படும். கூடுதலாக, குறைபாடுள்ள உபகரணங்கள் மாற்றப்படும். அதன்படி, இன்று முதல் பழனி ரோப்கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணி தொடங்குகிறது. எனவே இன்று முதல் ஒரு மாதத்திற்கு அதன் சேவை நிறுத்தி வைக்கப்படும். இதனால் பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின் இழுவை ரெயில் ஆகியவற்றை பயன்படுத்தி மலைக்கோவிலுக்குச் சென்று வரலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: இன்றைய நல்ல நேரம்: ஆகஸ்ட் 19, 2023, சனிக்கிழமை