கேட்டதை தருவார் சென்னை உடையவர் கோவில் ஸ்ரீ பிரசன்ன வெங்கேடச பெருமாள்!
உடையவர் கோயில் சென்னையிலும் அமைந்துள்ளது என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும். ஆம்.. சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தொப்பைத் தெருவில் தான் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோவில் தான் ஜஸ்டிஸ் பத்மநாபன் குழுவின் சென்னை ஹெரிடேஜ் கட்டடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில்தான் உடையவர் கோயிலென்றும் அழைக்கப்படுகிறது.
உடையவர் இத்திருக்கோயிலில் கைங்கரியம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் தான் இக்கோவில் உடையவர் கோயில் என்ற காரணப் பெயர் கொண்டு விளங்குகிறது. ஆயிரம் வருடத்திற்கு மேல் தொன்மை வாய்ந்த கோவில் என்று கூறப்படுகிறது. இது கிட்டத்தட்ட 1012 ஆண்டில் திரு சென்னையா செட்டியார் மற்றும் அவருடைய மனைவி லட்சுமி தேவி தம்பதியர்களின் முயற்சியில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோவிலுக்குள் நாம் அடி எடுத்து வைத்தவுடன் கண்ணில் தென்படுவது பிரமிக்க வைக்கும் நுழைவாயில் தான். அதோடு அண்ணாந்து பார்க்க வைக்கும் உயரமான துவஜஸ்தம்பம், கச்சிதமான சிறு மண்டபம். அப்படியே திருப்பதி வெங்கடேச பெருமாள் போலவே சுமார் ஆறு அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள வெங்கடேச பெருமாள் மனதை கவரும் விதத்தில் அருள்பாலிக்கிறார். திருப்பதி வந்தால் திருப்பம் என்று கூறுவார்கள். திருப்பதி மட்டுமில்லை இங்கு வந்தால் கூட வாழ்க்கையில் கட்டாயம் திருப்பம் ஏற்படும் என்பது நம்பிக்கை.
இப்பிறவி கடன் மட்டும் அல்ல முற்பிறவி கடனையும் தீர்க்கும் திருச்சேறை செந்நெறியப்பர்!
இந்தக் கோவில் குறித்து பெரிதளவில் யாருக்கும் தெரியாத காரணத்தால் இங்கு அவ்வளவு கூட்டம் வருவதில்லை. ஆனால் கூட்டம் அலை மோதாதன் காரணத்தால் மௌனத்தில் பெருமாளை வணங்க வாய்ப்பு கிடைக்கிறது. இங்கு தனியாக ஒரு சன்னதி வைஷ்ணவாசாரியர் ராமானுஜருக்கு இருக்கும்காரணத்தாலும் தான், இந்த கோவில் உடையவர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயிலின் சிறப்பு அம்சமே ராமானுஜர் இங்கே வந்து தங்கிப் பூஜைகள் செய்தார் என்பது தான்.
பெருமாளுக்கு ஏன் திருநாமம் முக்கியம்... அப்படி என்ன விசேஷம்?
மேலும் இந்தக்கோவில் அலர்மேல்மங்கை தாயார் சன்னதியும், கர்ப்பக்கிரஹத்திற்கு வெளியே ஸ்ரீ ராமர் லக்ஷ்மண சீதாதேவி சன்னதியும், ராமானுஜர் சன்னதியும் உள்ளன. சக்கரத்தாழ்வாரும் யோகநரசிம்மரும் பிரகாரத்தில் ஒரே விக்கிரகத்தில் முன்னும் பின்னுமாக ஒரு சன்னதியிலும், ஆண்டாள் ஒரு சன்னதியிலும், துவஜஸ்தம்பம் அருகே அனுமன் சன்னதியும் இருக்கின்றன.
இந்த கோயிலானது.. இயந்திரம் போல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில், கடவுளை கண்டு, மெய் மறந்து, மனமுருக வணங்கவும், தியானிக்கவும் பெருமாள் பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். திருப்பதி செல்ல முடியாத நிலையில் இந்த பெருமானை சென்று தரிசியுங்கள் கேட்டது கேட்டபடி தருவார் எம்பெருமான் ஏழுமலையான்.