பக்தி பரவசத்தை ஏற்படுத்தும்பூரி ஜெகநாதரின் ரத யாத்திரை சிறப்புகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
Jagannath Rath Yatra 2025: Grand Celebrations, History, and Rituals Explained : இந்தியாவின் பிரபலமான தேர் திருவிழாவில் பூரி ஜெகநாதர் கோவில் குறிப்பிடத்தகுந்தது. ஒவ்வொரு ஆண்டும் பகவான் ஜெகநாதர், பாலபத்ரர், சுபத்ரா ஆகியோர் தேர்களில் வீற்றிருக்க, பக்தர்களின் ஆரவாரத்தோடு ரத யாத்திரை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஊர்வலம் நாளை (ஜூன்.27) நடைபெறவுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கடற்கரை நகரமான பூரியில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் ஜெகநாதர் கோவில். விஷ்ணுவின் திருவடிவமான ஜெகநாதர், அவரது மூத்த சகோதரர் பாலபத்ரர், சகோதரி சுபத்ரா ஆகிய மூவரும் மூலவர்களாக வீற்றிருக்கிறார்கள். அவர்களை சிறப்பாக வழிபடும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்ட தேர்த் திருவிழா கொண்டாடப்படுகிறது. இக்கோவிலில் ஜெகநாதரின் 12 யாத்திரைகளில், ரத யாத்திரை மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இதை காண நாட்டில் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் படையெடுக்கின்றனர்.
இந்த பூரி ரத யாத்திரைக்காக ஒவ்வொரு வருடமும் ஜெகநாயர், பாலபத்ரர், சுமத்ரா ஆகிய மூன்று மூலவர்களுக்கும் புதிய தேர்கள் வடிவமைக்கப்படும். அதில் மூவரும் நகரை வலம் வரும் அழகை காண கண் கோடி வேண்டும் என்பார்கள்.
பூரி ரத யாத்திரை;
கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று ஜெகநாதரின் அபிஷேகத்துடன் வழிபாடுகள் தொடங்கின. மூலவர்களான மூவரையும் வேண்டிக் கொண்ட பக்தர்கள் ஜூன் 12ஆம் தேதி முதலே படையெடுக்கத் தொடங்கினர். இந்தாண்டு ரத யாத்திரை வழிபாடுகள் ஜூன் 26 அன்று மதியம் 1:24 மணிக்குத் தொடங்கி, ஜூன் 27 அன்று காலை 11:19 மணிக்கு முடிவடைகிறது. ஜெகநாதர், பாலபத்ரர், சுபத்ரா ஆகியோர் அவரவர் ரதங்களில் அழைத்துச் செல்லப்படும் முக்கிய ரத யாத்திரை ஊர்வலம் நாளை (ஜூன் 27) நடைபெறவுள்ளது.
சிறப்புகள்:
இந்த ரத யாத்திரை வாழ்க்கைப் பயணங்களை, ஆன்மா விடுதலையை எடுத்துச் சொல்லும் வகையில் கொண்டாடப்படுகிறது. பூரி ரத யாத்திரையில் தனது பக்தர்களை காண ஜெகநாதரே தேரில் வருவதாக நம்பப்படுகிறது. புராணங்களின் படி, இந்த தேர் உலாவில் ஜெகநாதர், தான் பிறந்த இடமான மதுராவுக்கு மீண்டும் திரும்புவதாக நம்பப்படுகிறது. தேர் இழுக்கும்போது கயிறுகளைத் தொடும் பக்தர்களுக்கு ஆசியும், பாவ மன்னிப்பும் கிடைக்கும் என்பது ஐதீகம். எல்லா தரப்பு மக்களையும் இணைப்பதால் ஒற்றுமையின் கொண்டாட்டம் என குறிப்பிடப்படுகிறது. பூரி மன்னரால் சேரா பன்ஹாரா சடங்கு செய்யப்படுகிறது. இந்த நிகழ்வு கடவுளின் பார்வையில் எல்லோரும் சமம் என்பதை நிரூபிக்கிறது.
