இந்த குணம் இருக்கவங்க ஒருநாளும் பணக்காரங்க ஆக முடியாது... உங்க கிட்ட இருந்தா உடனே மாத்திக்கங்க!!
Chanakya Niti : சாணக்யாவின் அறிவுரையின்படி சில பண்புகள் நம்மை பணக்காரர் ஆவதிலிருந்து தடுக்கிறது. உண்மையில் நீங்கள் முன்னேற வேண்டுமென்றால் இந்த 8 குணங்களை விட வேண்டும். அதை குறித்து பதிவில் காணலாம்.
சாணக்கியரை கௌடில்யர் (அ) விஷ்ணுகுப்தா எனவும் அழைப்பார்கள். இவர் பண்டைய காலத்தில் மிகவும் புகழ்வாய்ந்த இந்திய தத்துவஞானியும் ஆலோசகரும் ஆவார். அந்த காலத்தில் ஞானத்திற்காக பெரிதும் புகழப்பட்டசர். இவர் பொருளாதாரத்தை குறித்தும் பேசியிருக்கிறார். அப்படி சாணக்யாவின் சிந்தனைகளின் அடிப்படையில் எப்படி ஒருவரின் பொருளாதார முன்னேற்றம் தடுக்கப்படுகிறது என்பதை காணலாம்.
அறிவை வளர்த்து கொள்ளாமை:
வெளியுலகை தெரிந்து கொள்வது அவசியம். நம்முடைய அறிவுப்பசிக்கு தீனி போடவேண்டும். ஒருவர் கற்கும் கல்வி சிந்தனையை மேம்படுத்தும். கல்வியின் மீதும் அதன் வழியாக பெருகும் அறிவின் மீதும் சாணக்கியருக்கு எப்போதும் அதிக மதிப்பு இருந்தது. அவர் ஒரு மனிதன் வெற்றியை நோக்கி செல்ல முடியாததற்கு அவனுடைய அறியாமையும், அறிவை வளர்த்துக் கொள்ளாமையும் தான் காரணம் எனக் கூறுகிறார். இதனால் அவர்கள் மோசமான முடிவுகளை எடுக்கின்ற வாய்ப்பு அதிகம் பணக்காரராக மாற நினைக்கும் மனிதன் முதலில் அவனுடைய சிந்தனையை தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு கல்வியறிவு மட்டும் போதாது. பிறரின் அனுபவ அறிவிலும் கற்கலாம். அப்போதுதான் அவரால் தான் கொண்ட லட்சியத்தை அடைய முடியும்.
அதிக செலவு:
சிற்றின்ப தேவைகளுக்காக ஆடம்பர வாழ்க்கையை வாழக் கூடாது. தொலைநோக்கு சிந்தனையுடன் இருக்க வேண்டும். அதிக செலவு இன்பம் கொடுத்தாலும் உங்களை சீக்கிரமே ஆண்டி ஆக்கிவிடும். ஆக்கப்பூர்வ செலவுகளில் கவனம் செலுத்த வேண்டும். பணத்தை அளந்து அளவாக செலவழிக்க வேண்டும்.நிதிசார்ந்த செலவுகளுக்கு யோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். இதுவே சாணக்யாவின் அட்வைஸ்.
சிந்திக்கும் விதம்:
நாம் எதை சிந்திக்குறோமோ அதை தான் ஈர்ப்போம். அதனால் எதிர்மறை எண்ணங்களை கொண்டிருப்பவர்கள் ஒருநாளும் பணக்காரர் ஆகமுடியாது. எதிர்மறையான சிந்தனையை கொண்டவர்கள் எதிர்மறையான விளைவுகளைதான் ஈர்க்கிறார்கள். இதனால் வெற்றி வாய்ப்பை எட்டமாட்டார்கள் என்று சாணக்யா நம்பினார்.
இதையும் படிங்க: Chanakya Niti : 'இந்த' நபர்களிடம் உங்கள் சோகத்தை ஒருபோதும் சொல்லாதீங்க.. ஜாக்கிரதை! - ஆச்சார்ய சாணக்கியர்
முறையான திட்டமிடல்:
சாணக்யா நல்ல திட்டமிடும் சாமர்த்தியவாதி. அவர் கவனமாக திட்டமிடல் நம்மை வெற்றிக்கு கூட்டி செல்லும் என்று நம்பினார். பணக்காரர் ஆக நினைப்பவர்கள் தெளிவான இலக்குகளை வைத்து அதை அடைய சிந்தித்து செயல்பட வேண்டும்.
சீரற்ற செயல்பாடு:
நாம் தோல்வி அடைந்தாலும் மனம் தளராமல் விடாமுயற்சியுடன் முயன்றால் மட்டுமே நம்முடைய இலக்கை அடைய முடியும். இதற்கு நாம் சீராக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு வாரம் உழைப்பது அடுத்த வாரம் ஓய்வில் இருப்பது, சில நேரம் முயற்சி செய்வது மற்ற நேரங்களில் மனம் தளர்ந்து முயற்சியை கைவிடுவது உங்களை நிச்சயமாக பணக்காராக்காது.
இதையும் படிங்க: Chanakya Niti : இந்த அறிகுறிகள் வீட்டில் இருக்கா..? உங்களுக்கு கெட்ட காலம் ஆரம்பம்.. ஜாக்கிரதை!
மற்றவர்களின் தயவை எதிர்பார்ப்பது:
நான் பணக்காரராக வேண்டுமென்றால் நமக்கு தன்னம்பிக்கை அதிகம் இருக்க வேண்டும். நம்முடைய பொறுப்புகளை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். ஒருவருடைய கடின உழைப்பு தான் அவர்களை செல்வத்தை சேர்ப்பதற்கு அழைத்துச் செல்லும். மற்றவர்களை எல்லாவற்றிற்கும் சார்ந்து இருப்பது உங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சியை தடுக்கும்.
சோம்பல்:
எதையும் வெறும் சொற்களில் மட்டும் இல்லாமல் செயலிலும் செய்து முடிப்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் பணக்காரர்களாக உயர முடியும் என்று சாணக்கியர் கூறினார். கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் அதற்கு முக்கியம். சோம்பலாக இருப்பவர்கள் எதையும் அடுத்த நாளுக்கு ஒத்தி வைப்பவர்கள் பணக்காரர்களாக முடியாது என சாணக்கியர் கூறுகிறார்.
ஒத்தி வைத்தல்:
எந்த ஒரு காரியத்தையும் உடனே செய்யாமல் தள்ளி போடுபவர்கள் தங்களுடைய திட்டங்கள், வாய்ப்புகள் ஆகியவற்றை இழக்கிறார்கள். சரியான நேரத்தில் வாய்ப்புகளைப் பயன்படுத்துபவர்கள் வெற்றியை அடைவார்கள்.
ஒழுங்கு செய்தல்:
சிலர் சிற்றின்பங்களில் மூழ்கி கிடப்பார்கள். அவர்களிடன் வெற்றியை அடையும் ஒழுக்கம் இருக்காது. சிற்றின்பத்தில் நிறைவடைந்தால் நீண்ட கால வெற்றியை அடைய முடியாது. உங்களுக்கு பண இழப்புக்கு கூட வழிவகுக்கும்.
தோல்வி பயம்:
நாம் தோற்று விடுவோமோ என்று பயப்படுவதால் பல நேரங்களில் வெற்றி வாய்ப்பை அடைய முடியாமல் போய்விடுகிறது என்ன சவால்கள் வந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு முயற்சி செய்பவர்கள் மட்டுமே வெற்றியை பெற முடியும் தோல்வி பயத்தை விட்டு வெளியில் வருபவர்களால் தான் உண்மையில் பணக்காரர்களாக முடியும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D