ஆடிப்பூரம் 2024 எப்போது? விரைவில் திருமணம் நடக்க.. குழந்தை பாக்கியம் கிடைக்க முதல்ல 'இத' செய்ங்க!
Aadi Pooram 2024 : இந்த 2024 ஆம் ஆண்டு ஆடிப்பூரம் எப்போது வருகிறது. குழந்தை மற்றும் திருமண பாக்கியம் கிடைக்க இந்நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
ஆடி மாதத்தில் அம்மனுக்கு மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று ஆடிப்பூரம். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு அன்று அம்பாளை நினைத்து வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதுபோலவே, ஆடிப்பூரமும் அம்பிகைக்கு மிகவும் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. ஆடிப்பூரம் என்பது 27 நட்சத்திரங்களில் 11வது நட்சத்திரம் தான் பூரம். எல்லா மாதங்களிலும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், அந்நாளில் தான் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படும் விழாவும் கொண்டாடப்படும்.
ஆடி மாத பூர நட்சத்திரத்தில் தான் அம்பாள் தோன்றியதாக புராணங்கள் சொல்லுகின்றது. அதுமட்டுமின்றி, பன்னிரு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் இந்த ஆடிபூரம் நட்சத்திரத்தில் தான் அவதரித்ததாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, மகாலட்சுமியின் அவதாரமான ஆண்டாளின் அவதார தினத்தையே நாம் ஆடிப்பூரம் போன்ற பலவிதமான பெயர்கள் கொண்டாடி வருகின்றோம்.
மேலும், இந்நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஆடி 18 பெருக்கு; தாலி கயிறு மாத்தும் போது 'இத' மறக்காதீங்க.. அவசியம் தெரிஞ்சிகோங்க..!
வளைகாப்பு திருவிழா:
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம். அதுமட்டுமின்றி, இம்மாதத்தில் அம்மனின் சக்தி அதிகரித்து காணப்படும் என்று சொல்லப்படுகிறது. அன்னை பார்வதி தேவியும் மண்ணில் அவதாரம் எடுத்ததும் இந்த ஆடிப்பூரம் நட்சத்திரம் அன்றுதான் என்று சொல்லுகின்றனர். இந்த ஆடிப்பூரம் அன்று தான் அன்னை பராசக்திற்கு வளைகாப்பு திருவிழா நடத்தப்படும். எனவே, இந்நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கி கொடுத்து கோவில்களில் பிரசாதமாக கொடுக்கும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் மற்றும் பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
இதையும் படிங்க: ஆடி மாத ஸ்பெஷல் அம்மன் கூழ்.. இனி வீட்டிலேயும் செய்யலாம்.. ரெசிபி இதோ!
2024 ஆடி பூரம் தேதி மற்றும் நேரம்:
இந்த 2024 ஆம் ஆண்டு ஆடிப்பூரம் ஆகஸ்ட் 7ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகின்றது. பூரண நட்சத்திரமானது ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை 6.42 மணி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு 9.3 வரை உள்ளது. ஆனால், ஆகஸ்ட் 7ஆம் தேதி முழுவதும் ஆடிப்பூரண வழிபாட்டினை மேற்கொள்ளலாம். எனவே, குழந்தை பாக்கியமும் திருமண பாக்கியமும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வளையல் குங்குமம் வாங்கி கொடுத்து, வேண்டிய வரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D