மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கடுமையான வயிறு வலியை குறைக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள டீக்களில் ஒன்றை குடியுங்கள். வலியிலிருந்து உடனே நிவாரணம் கிடைக்கும்.

Best Tea for Period Pain : மாதவிடாய் காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக பெண்களுக்கு உடலில் சில பிரச்சனைகள் ஏற்படும். அதில் பெரும்பாலும் பெண்களை பாதிக்கும் பிரச்சனை எதுவென்றால் வயிற்று வலி தான். மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கடுமையான வயிறு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க ஒரு சில பெண்கள் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவார்கள். சிலரோ வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்வார்கள். இத்தகைய சூழ்நிலையில், மாதவிடாய் வலியிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள டீக்களில் ஒன்றை முயற்சி செய்து பாருங்கள். அவை என்னென்ன என்று இந்த தெரிந்துகொள்ளலாம்.

மாதவிடாய் வலியைக் குறைக்க உதவும் டீ வகைகள்:

1. இஞ்சி டீ:

இஞ்சி எப்போதுமே நம் வீட்டு சமையலறையில் இருக்கும் ஒரு முக்கியமான பொருள். இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இது பல வகையான வீட்டு வைத்தியங்களுக்கும் நல்ல பலன்களை அளிக்கும். மாதவிடாய் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கவும் இஞ்சி உதவுகிறது. இஞ்சியில் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் உள்ளதால், வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும். எனவே, மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலியை குறைக்க இஞ்சி டீ அருந்தலாம். அதுபோய், மாதவிடாய் காலத்தில் முதல் 3 நாட்கள் 700 மில்லி கிராம் இஞ்சி பொடியை சாப்பிட்டால் மாதவிடாய் வலி குறையும் என்று ஆராய்ச்சி சொல்லுகின்றது.

2. இலவங்கப்பட்டை டீ:

இலவங்கப்பட்டை சமையலறையில் பயன்படுத்தும் ஒரு முக்கியமான மசாலா பொருள். இலவங்கப்பட்டை டீ லேசான காரம் மற்றும் இனிப்பு சுவையுடன் இருக்கும். வீக்கத்தை குறைக்க உதவுவதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன. எனவே மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறைக்க இந்த டீ உதவும். அதுமட்டுமின்றி, கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனைக்கும் இலவங்கப்பட்டை பெரியது உதவும்.

3. பெப்பர்மின்ட் டீ:

பெப்பர்மென்ட் டீயானது பெப்பர்மின்ட் செடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது இந்த இலையில் மொத்தனால் நிறைந்துள்ளன. மேலும் இது வலுவான மணம் மற்றும் குளிர்ச்சியான பண்புகளை கொண்டுள்ளன. பல ஆரோக்கிய நன்மைகளை இது வழங்கும். பெப்பர்மின்ட் என்னை ஆனது தசைப்பிடிப்பு, வயிற்று பிடிப்புகளை குறைக்க முக்கிய பங்கு வகிக்கும். மாதவிடாய் வலியை குறைக்க இது உதவும் என்று எந்த அறிவியல் ஆதாரமுமில்லை. ஆனால் சில பெண்கள் இது வலியை குறைப்பதாக சொல்கின்றன.

4. கெமோமில் டீ:

கெமோமில் டீயானது உலர்ந்த கெமோமில் பூக்களால் தயாரிக்கப்படுகிறது. இந்த டீயானது லேசான நல்ல மலர் சுவையுடையது. கெமோமில் டீ மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் தரும் என்று தெரியவில்லை. ஆனால் இந்த டீ அதிக ரத்தப் போக்கை குறைவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் சோர்வை குறைக்கும, நல்ல தூக்கத்திற்கு உதவும்.

5. சிவப்பு ராஸ்பெர்ரி இலை டீ:

பிளாக் டீயை போலவே இந்த சிவப்பு ராஸ்பெர்ரி இலை டீயின் சுவையானது லேசாக இருக்கும். இது பெண்களின் பல பிரச்சினைகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். கர்ப்பப்பை பிரச்சனையை இது உதவுகிறது. ஆனால் இவற்றின் நிரூபிக்க எந்தவித அறிவியல் ஆதாரங்களும் இல்லை. ஆனால் இது தங்களது பிரச்சினையை சரி செய்ததாக பல பெண்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

குறிப்பு: மேலே சொன்ன விஷயங்கள் பொதுவான தகவல் என்பதால், மருத்துவரிடம் ஆலோசனை கேட்காமல் எந்த ஒரு புது முயற்சியையும் எடுக்க வேண்டாம்.