Asianet News TamilAsianet News Tamil

காதலின் 6 அத்தியாயங்கள்... மனதை மயக்கியதா ‘மாடர்ன் லவ் சென்னை’ வெப் தொடர்? - முழு விமர்சனம் இதோ

பாரதிராஜா, தியாகராஜன் குமாரராஜா உள்பட 6 இயக்குனர்கள் இயக்கியுள்ள மாடர்ன் லவ் சென்னை என்கிற ஆந்தாலஜி வெப் தொடரின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Modern Love chennai Anthology web series full episode review
Author
First Published May 18, 2023, 10:47 AM IST

மாடர்ன் லவ் சென்னை என்கிற ஆந்தாலஜி வெப் தொடர் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த வெப் தொடர் மொத்தம் 6 அத்தியாயங்களை கொண்டது. இதில் ‘லாலா குண்டா பொம்மைகள்’ என்கிற முதல் அத்தியாயத்தை ராஜு முருகன் இயக்கி உள்ளார். அதேபோல் ‘இமைகள்’ என்கிற இரண்டாவது அத்தியாயத்தை பாலாஜி சக்திவேல் இயக்கி உள்ளார்.

‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி’ என்கிற மூன்றாவது அத்தியாயத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கி இருக்கிறார். ‘மார்கழி’ என்கிற நான்காவது அத்தியாயத்தை அக்‌ஷய் சுந்தர் இயக்கி இருக்கிறார். ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’ என்கிற நான்காவது அத்தியாயத்தை பாரதிராஜாவும்,  ‘நினைவோ ஒரு பறவை’ என்கிற ஐந்தாவது அத்தியாயத்தை தியாகராஜன் குமாரராஜாவும் இயக்கி உள்ளனர்.

இதில் முதல் மூன்று அத்தியாயத்திற்கு ஷான் ரோல்டன், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் ஆகியோர் இசையமைத்து உள்ளனர். எஞ்சியுள்ள மூன்று அத்தியாயத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீஸ் ஆகியுள்ள மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி வெப் தொடரை பார்த்த நெட்டிசன்கள் டுவிட்டரில் தங்களது விமர்சனத்தை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதனை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... சினிமாவை விட்டு விலகும் சூப்பர்ஸ்டார்..! ரஜினியின் கடைசி படத்தை கன்பார்ம் பண்ணிய மிஷ்கின்- ரசிகர்கள் அதிர்ச்சி

Modern Love chennai Anthology web series full episode review

இமைகள் சூப்பர்

ராஜுமுருகன் இயக்கியுள்ள லாலா குண்டா பொம்மைகள் ஆவரேஜாக இருப்பதாகவும், கலர்புல்லான மேக்கிங் தவிர அதில் ஒன்றுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள இமைகள் நன்றாக இருக்கிறது என்றும், டிஜே பாணுவின் நடிப்பு சூப்பர் என்றும் பதிவிட்டுள்ளார். கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி’ செம்ம மொக்கையாகவும், கிரிஞ்சாகவும் இருப்பதாக பதிவிட்டுள்ளார். 

ராஜா ராஜாதான்

இளையராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மட்டும் தனியாக தெரிந்தது. சில காட்சிகளை அமைதியால் கையாண்டிருப்பது அருமை. சந்தேகமே இல்லை, அவர் தான் அவர் மட்டும் தான் என்றென்றும் இசையின் கடவுள் என குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜாவின் டைம் டிராவல்

மாடர்ன் லவ் சென்னை வெப் தொடரில் இளையராஜாவின் இசை பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அந்த வகையில், டைம் டிராவல் செய்து மார்கழி தொடரில் இடம்பெறும் தென்றல் மற்றும் நெஞ்சில் ஒரு மின்னல் ஆகிய பாடல்களை இளையராஜா இசையமைத்து உள்ளதாகவும், இந்த இரண்டு முத்தான பாடல்களில் விண்டேஜ் இளையராஜாவை பார்க்க முடிந்தது என குறிப்பிட்டுள்ளார்.

திரும்ப திரும்ப பார்க்கனும்

தியாகராஜன் குமாரராஜாவின் நினைவோ ஒரு பறவை தொடரில் உள்ள பல்வேறு நுனுக்கங்களை திரும்ப திரும்ப பார்த்தால் தான் புரிந்துகொள்ள முடியும், ராஜா ராஜா தான்யா. இதில் பயன்படுத்தியுள்ள வண்ணங்கள், பிரேம்கள், இசை மற்றும் எழுத்து மூலம் மெய்மறக்க செய்துள்ளார் இயக்குனர் என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

பாலாஜி சக்திவேல் கம்பேக்

மாடர்ன் லவ் சென்னை வெப் தொடரில் இடம்பெறும் ‘இமைகள்’ என்கிற அத்தியாயத்தை பாலாஜி சக்திவேல் இயக்கி உள்ளார். கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு பின் மீண்டும் இயக்குனராக களமிறங்கி உள்ள அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

ராஜாவின் ராஜ்ஜியம்

மாடர்ன் லவ் சென்னை வெப் தொடருக்காக இளையராஜா இசையமைத்துள்ள அனைத்து பாடல்களும் புதிதாக இருக்கிறது. இதுபோன்ற பாடல்களை அவர் இதுவரை கொடுத்ததில்லை என நினைக்கிறேன். உனக்கு திமிர் இருக்கலாம் தல, உனக்கு இல்லேனா வேற யாருக்கு இருக்க முடியும் என சிலாகித்துப்போய் பதிவிட்டுள்ளார்.

பாலுமகேந்திராவுக்காக பாரதிராஜா

பாரதிராஜா பறவைக்கூட்டில் வாழும் மனிதர்கள் என்கிற அத்தியாயத்தை இயக்கி இருக்கிறார். இதற்கு இளையராஜா இசையமைத்து உள்ளார். இந்த குறும்படத்தை மறைந்த தனது நண்பனும், இயக்குனருமான பாலுமகேந்திராவுக்கு சமர்பிப்பதாக அதன் டைட்டில் கார்டில் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்...  ரஜினியை தொடர்ந்து கமல்ஹாசன் உடன் கூட்டணி அமைக்கும் நெல்சன்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

Follow Us:
Download App:
  • android
  • ios