பாகுபலியை போல் தட்டித்தூக்கினாரா மணிரத்னம்? - பொன்னியின் செல்வன் முழு விமர்சனம் இதோ
Ponniyin selvan : லைகா நிறுவனம் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முழு டுவிட்டர் விமர்சனம் இதோ.
தமிழ் சினிமாவில் 70 ஆண்டுகளாக பல்வேறு ஜாம்பவான்கள் எடுக்க முயற்சித்த பொன்னியின் செல்வன் திரைப்படம், தற்போது மணிரத்னம் மூலம் சாத்தியமாகி உள்ளது. தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் இன்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரமும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளனர். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் மணிரத்னம்.
இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 4.30 மணிக்கு திரையிடப்பட்டது. ரிலீசான இடம்மெல்லாம் திருவிழாக்கோலம் பூண்டது போல் இப்படத்தை காண காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்து வருகிறது. இப்படம் தமிழர்களின் பெருமை என்று நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். அதேநேரத்தில் பாகுபலியோடு இப்படத்தை கம்பேர் செய்ய வேண்டாம் என்றும், இது வேற லெவலில் இருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர். பொன்னியின் செல்வன் FDFS பார்த்து ரசிகர்கள் பதிவிட்ட விமர்சனங்களின் தொகுப்பு இதோ...