WE CAN CHECK THE VILLANGAM THROUGH ONLINE
பல ஆண்டு காலமாக கனவு கண்டு வீடு கட்டுவதற்கோ அல்லது தொழில் தொடங்கவோ, பிடித்த இடத்தை தேர்வு செய்து,அந்த இடத்தை வாங்குவதற்கு தேவையான பணத்தை அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என வாங்கி வைத்து,வட்டிக்கு கடனும் வாங்கி ஒரு இடத்தை வாங்கும் போது,அதில் உள்ள நிறை குறை தெரிந்துதானே வாங்க வேண்டும்...

சட்டப்படி அந்த இடம் சரியான இடம் தானா,அல்லது அந்த இடத்திற்காக சட்டப்படி ஏதாவது பிரச்னை உண்டா,விற்பவர் நமக்கு மட்டும் தான் விற்றுள்ளாரா அல்லது ஒரே நேரத்தில் இரு வேறு நபருக்கு அந்த இடத்தை விற்க முற்பட்டு உள்ளனரா....இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்க ஒரே வழி,அந்த இடத்தை வாங்கும் முன், வில்லங்கம் என்ற ஒன்றை பார்க்க வேண்டும் அல்லவா....
வில்லங்கம் பார்ப்பது எப்படி?
நாம் வாங்க நினைக்கும் இடத்தின் பத்திரம் மற்றும் பட்டா எண்ணை கொண்டு பத்திரப்பதிவு அலவலகத்தில் சமர்ப்பித்து,அதற்கான தொகையை செலுத்தி,இதற்கிடேயே புரோக்கர்களுக்கு கொஞ்சம் பணத்தை செலுத்தி பின்னர் தான்,நமக்கு தெரியும் விவரம் சரிபார்க்கப்பட்டதா என்று....
ஆனால் இன்று ஆன்லைனில் மிக எளிதாக,இருந்த இடத்திலிருந்தே வில்லங்கத்தை பார்க்கலாம்.....
http://ecview.tnreginet.net/ என்ற இந்த வெப்சைட்டை கிளிக் செய்தால்,
ஜோன்,மாவட்டம்,அடுத்ததாக தேதி எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை வேண்டுமோ தேர்வு செய்துக் கொள்ளலாம்
சப் ரிஜிஸ்டர் ஆபிஸ் : உங்கள் ஏரியா ஆபீஸ்
கிராமம்
சர்வே எண்: பத்திரத்தில் உள்ள சர்வே எண்....
உதாரணம் :123/2A
கடைசியாக,கட்டத்தில் கொடுக்கப்பட்டு உள்ள அந்த நான்கு நம்பரை டைப் செய்து,சர்ச் மீது கிளிக் கொடுக்க வேண்டும்,அவ்வாறு கொடுக்கும் போது, நாம் தேர்வு செய்த இடத்திற்கான வில்லங்கம் PFF பார்மில் கிடைக்கும்.
டேக்னாலஜி வளர்ந்துவிட்டது என்பது உண்மை...இனி வரும் காலங்களில் அனைத்தும், ஒரே இடத்தில் அமர்ந்தபடியே செய்து முடிக்கலாம்.
