Asianet News TamilAsianet News Tamil

வீடுகளில் அமைக்கபப்டும் சுற்று சுவர் பற்றிய டிப்ஸ்…

tips about-amaikkapaptum-round-wall-in-houses
Author
First Published Feb 15, 2017, 1:27 PM IST


பொதுவாக வீட்டின் கட்டுமான பணிகள் முடிந்த பிறகு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு அழகான ‘காம்பவுண்டு கேட்’ அமைக்கப்படும். அதற்கு அழகிய வண்ணங்கள் பூசப்பட்டு கண்கவரும் தோற்றத்துடன் பராமரிக்கப்படுவது வழக்கம்.

‘காம்பவுண்ட் கேட்’ வீட்டின் தலைவாசலுக்கு நேராக இருப்பதால் அதன் அமைப்பு மற்றும் ‘டிசைன்’ ஆகியவற்றோடு வீட்டு உரிமையாளர்கள் சுற்றுப்புறத்தில் அமைக்கப்படும் வேலி பற்றியும் கவனம் கொள்கிறார்கள்.

தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ அமைக்கப்படும் வேலிகள் பற்றிய குறிப்புகள் இதோ.

சுற்று சுவர் அவசியம்

தனி வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய எதுவாக இருந்தாலும் பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்று சுவர் அமைப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பல இடங்களில் வீட்டின் கட்டுமான பணிகளோடு சேர்த்து செங்கலால் சுற்று சுவரை அமைப்பதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

‘பட்ஜெட்’ உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வேவ்வேறு வகையான கட்டுமான பொருட்கள் கொண்டும் ‘காம்பவுண்டு’ சுவர்கள் தற்போது அமைக்கப்படுகின்றன. அவற்றில் விலை குறைவாக இருக்கும் ‘பென்ஸிங்’ எனப்படும் தடுப்பு வேலிகளில் உள்ள வகைகளை பார்ப்போம்.

‘செயின் லிங்க் பென்ஸிங்’

இவ்வகை தடுப்பு வேலிகள் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் வீட்டுக்குள் புகுந்துவிடாதவாறு தடுக்கும் நோக்கில்தான் முதலில் அமைக்கப்பட்டது. பெரும்பாலும் ‘ஜி.ஐ’ எனப்படும் ‘கால்வனைஸ்டு அயர்ன்’ எனப்படும் துருப்பிடிக்காத இரும்பு கம்பிகளால் இவ்வகை வேலிகள் தயாரிக்கப்படுகின்றன.

‘பட்ஜெட்டுக்கு’ பாதிப்பு இல்லாத விலைகளில் இவை கிடைப்பதோடு உறுதியாகவும் இருப்பது இவற்றின் பயன்பாட்டை அதிகமாக்கியிருக்கிறது. குழந்தைகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் ‘பெட் அனிமல்ஸ்’ ஆகியவை வீட்டிலிருந்து வெளிப்புற சாலைக்கு செல்வதை தடுக்கவும் இவை சரியான அமைப்பாக உள்ளன. பொதுவாக வீட்டு தோட்டம் மற்றும் வீட்டு விலங்குகளின் கூண்டுகளுக்கு பாதுகாப்பாகவும் இவற்றை அமைக்கலாம்.

‘பார்ப்டு ஒயர் பென்ஸிங்’

இவ்வகை வேலியானது முட்கள் கொண்டதாக இருப்பதால் வீடுகளில் செங்கல் சுவரால் அமைக்கப்பட்ட சுற்று சுவருக்கு மேற்புறத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும் நகருக்கு வெளிப்புறத்தில் வீட்டு மனை வாங்கும் சூழலில் அதன் பாதுகாப்புக்காகவும் இவ்வகை வேலி அமைக்கப்படுகிறது.

பண்ணை வீடுகள், கடற்கரையோரமாக இருக்கும் தோட்ட வீடுகள் மற்றும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் வீடுகள் ஆகியவற்றின் ‘கார்டன் பென்ஸிங்’ ஆகவும் இவை பயன்படுகின்றன. முள் அமைப்பு கொண்ட வேலியாக இருப்பதால் தனி வீடுகளுக்கு பாதுகாப்பு அரணாகவும் இருக்கின்றன. வீட்டின் பாதுகாப்பு

‘பி.வி.சி செயின் லிங் பென்ஸிங்’

‘பிளாஸ்டிக் கோட்டிங்’ தரப்பட்டிருக்கும் இவ்வகை கம்பி வேலிகள் நகர்ப்புறங்களில் பல இடங்களில் பரவலான உபயோகத்தில் இருக்கிறது. வீடுகளின் தோட்டப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் விளையாட்டு மைதானங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கும் பூங்காக்கள், மேல்மாடிகள் ஆகியவற்றில் பாதுகாப்புக்காக இவை கட்டமைக்கப்படுகின்றன.

கான்கிரீட் சுவரை ஒப்பிடும்போது எடை மட்டுமல்லாமல் விலையும் குறைவாக இருப்பதோடு, பல நிறங்களிலும் தயாரிக்கப்பட்டு சந்தையில் கிடைக்கின்றன. இவற்றில் கூர்மையான பகுதிகள் இல்லாததால் குடியிருப்பு பகுதிகளில் பயன்படுத்த ஏற்றதாக உள்ளது.

பிற வகைகள்  வீட்டின் பாதுகாப்பு 

மேற்கண்டவை தவிர தனித்தனியான ‘பிளாக்குகளாக‘ கிடைக்கும் ‘ரெடிமேடு கான்கிரீட்’ சுவர் அமைப்புகள், ‘வெல்டடு மெஷ்’ எனப்படும் இரும்பு கம்பி வலை, அலுமினியம், இரும்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் ‘எக்ஸ்பான்டடு மெட்டல்’ வேலிகள் ஆகிய வகைகளும் உபயோகத்தில் இருந்து வருகின்றன.

விலை, எடை, அமைப்பதற்கு ஆகும் செலவு மற்றும் நேரம் ஆகிய பல விதங்களில் எளிதாக இருக்கும் இவற்றையும் பயன்படுத்தலாம்

Follow Us:
Download App:
  • android
  • ios