Three-dimensional pictures of your room ...
பழங்காலத்தில் இருந்து இப்போது வரைக்கும் இருக்கும் ஒரு கலைதான் ஓவியம்.
அதிலும் மேல்நாடுகளில் தரைகளிலும், சுவர்களிலும் வரையப்படும் ரசனையான ஓவியங்களுக்கு வரவேற்பு அதிகம். நாளடைவில் முப்பரிமாண ஓவியங்களாக உருமாறியதுதான் பெரிய திருப்புமுனை.
அங்கு உருவாகும் அனைத்து வித குடியிருப்புகள், வணிகவளாகங்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற கட்டிடங்களின் தரைகளில் திரும்பிய இடமெல்லாம் கலை உணர்வுமிக்க ஓவியங்களை வரைந்து தள்ளுகிறார்கள் உள்ளூர் ஓவியர்கள்.
குடியிருப்பு வாசிகளையும், வாடிக்கையாளர்களையும் மகிழ்விப்பதற்கு கட்டிட மற்றும் நிறுவனங்களின் சொந்தக்காரர்களே இது போன்ற ஓவியங்களை வரையச் செய்கிறார்கள்.
ஓவியங்கள் என்றால் எப்போதும் நாம் பார்த்து பழகிபோன இயற்கை கண்காட்சி, அழகியல் சார்ந்த ஓவியங்கள் அல்ல.
திடீரென நீச்சல் குளத்திலிருந்து வெளியேறும் சுறா, நடைபயிலும் சிங்கம், ராட்சத பாம்பு, பாதாள சுரங்கம் போன்ற பலவகையான தோற்ற மாயைகளை ஏற்படுத்தும் முப்பரிமாண ஓவியங்களே வரையப்படுகிறது.
சிறுவர்களை மட்டுமன்றி பெரியவர்களையும் இது பெரிதளவு ஈர்க்கிறது.
இதுபோன்ற முப்பரிமாண படங்களை உங்களது அறைகளில் வரைந்தும், அல்லது ஸ்டிக்கராக ஒட்டியும் உங்களது அறையின் அழகை பன்மடங்கு பெருக்கலாம்.
இது போன்ற ரசனையைத் தூண்டும் முப்பரிமாண ஓவியங்களை வரைந்து வைத்தால் அது உங்களது நண்பர்களை பெருமளவு ஈர்க்கும்.
