Asianet News TamilAsianet News Tamil

கட்டுமானத்தின்போது ஏற்படும் செலவை குறைக்க இந்த வழிமுறைகள் உதவும்...

These guidelines help to reduce cost of construction
These guidelines help to reduce cost of construction
Author
First Published Nov 27, 2017, 2:02 PM IST


சொந்தமாக வீடு கட்ட தொடங்குபவர்கள் பெரும்பாலும் முழுப்பணத்தையும் வைத்துக்கொண்டுதான் வேலைகளை ஆரம்பிப்பார்களா? என்றால் நிச்சயம் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். 

கையில் கால்பணம், பையில் கால்பணம், ஊரில் கால்பணம், கடனில் கால்பணம் என்று முழுப்பணமும் ஒருவாறு சேர்த்துத்தான் நடுத்தர மக்களின் வீடுகள் கட்டப்படுகின்றன. என்னதான் பட்ஜெட்டை இழுத்துப்பிடித்தாலும் கடைசியில் அது எகிறி விடுவது ரொம்பச் சாதாரணமாக நடைபெறும் ஒரு விஷயமாகும். கட்டுமான செலவை கட்டுப்படுத்த வழிமுறைகள்

பட்ஜெட் தொகையை கடந்துவிடாமல் இருக்க ஏதாவது வழிவகைகள் உண்டா? உண்டு.

1.. வீட்டின் எல்லா பகுதிகளிலும் நமது உபயோகத்துக்கான அளவுகள் என்ன என்பதில் தெளிவான வரையறை அவசியம் தேவை.

2.. முக்கியமாக வீடு கட்டப்போகும் மண்ணின் அமைப்பு, அந்த மண்ணின் பளு தாங்கும் திறன் ஆகியவை பற்றிய தெளிவான தகவல்கள் பெறுவது முக்கியம்.

3.. ஒரு நல்ல திறமை வாய்ந்த கட்டிடப் பொறியாளரிடம் வீட்டிற்கான வரைபடத்தினை பெறுவதோடு, போதுமான தொழில்நுட்ப அறிவுரைகளையும் பெற வேண்டும்.

4.. கட்டிடம் பற்றிய எல்லா விதமான விபரங்கள், கட்டுமான உத்திகள், வேலை பற்றிய சகல விபரங்கள், அதில் பயன்படுத்தக்கூடிய சகலவிதமான பொருட்கள், அதன் தர நிர்ணய அளவீட்டு முறைகள் போன்ற விபரங்களை அறிந்து கொள்வது அவசியம். இதனால் தேவையற்ற கட்டிட அமைப்புகள் தவிர்க்கப்படும்.

5.. திறமையான கட்டிட அமைப்பு நிபுணரிடம் வரைபடம் பெறும்போது நவீன முறை கட்டமைப்பிற்கான வடிவமைப்பினைப் பெற்றால் (லிமிட் ஸ்டேட் டிசைன்) மொத்த செலவில் பத்து சதவிகிதத்தை குறைக்கலாம்.

6. கட்டிடம் கட்டுவது பற்றிய முன் அனுபவமும், ஓரளவு தெளிவான பார்வையும் உள்ளவர்கள் நல்ல அனுபவம் பெற்ற பொறியாளரிடம் பொறுப்பை ஒப்படைக்கலாம்.

7.. அப்படி இன்னொருவரிடம் ஒப்படைப்பதாக இருந்தால் சதுரஅடி முறையை நாடாமல் ‘டர்ன் கீ’ எனப்படும் மொத்த செலவு விபரங்களை வாங்கி அதன்படியான காலவரையறைக்குட்பட்ட ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios