Asianet News TamilAsianet News Tamil

ரியல் எஸ்டேட் சம்மந்தமான பொதுவான சில கேள்விகளும், அவற்றிற்கான பதில்களும்...

Some common questions related to real estate and their answers ...
Some common questions related to real estate and their answers ...
Author
First Published Nov 27, 2017, 2:04 PM IST


1.. விலை அதிகமான வீடுகளை வாங்குவோர் வீட்டுக்கடன் பெறுவதில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன?

வீட்டுக் கடன் பெறுவதைப் பொறுத்தவரையில் விலை குறைவான வீட்டை வாங்குவோரும் விலை அதிகமான வீட்டை  வாங்குவோரும் ஒரே மாதிரி நிலையில்தான் இருக்கின்றனர். கடன் வாங்குபவர்களின் மாத வருமானம் என்ன?, கடனை அவர்களால் திருப்பிச் செலுத்த முடியுமா? என்பதை மட்டுமே வங்கிகள் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன.

புதிதாக வீடு வாங்குபவர்களில் அறுபதிலிருந்து எழுபது சதவீதம் பேர் விலை அதிகமான வீடுகளையே வாங்குகின்றனர். ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை குறைத்தால் அவர்களுக்கு மேலும் பயன் கிடைக்கும்.

2.. வாங்கிய வீட்டின் மதிப்பு வருங்காலத்தில் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதைத் தவிர, புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு என்னென்ன லாபங்கள் இருக்கின்றன?

ஒரு வீட்டை வாங்கினால், மூன்று விதங்களில் லாபம் பெற முடியும். முதலாவதாக, அதன் மதிப்பு உயர்ந்துகொண்டே இருக்கும். இரண்டாவதாக, வீட்டு வாடகை. வாங்கிய வீட்டில் நாமே குடியிருந்தால் வாடகை மிச்சம், அல்லது அதை வாடகைக்கு விட்டால் அதிலிருந்து கிடைக்கிற வாடகை லாபம். மூன்றாவதாக, வரிச் சலுகை.

‘வீடு வாங்கியவுடன் உடனே அதன் விலைமதிப்பு ஏறிவிடும் என்று எதிர்பார்க்கக்கூடாது. சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் நிலத்தின் விலைமதிப்பு உயரும். அதைப்போல நிலத்தின் மதிப்பு ஆண்டுதோறும் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டே இருக்கும் என்றும் நினைக்கக்கூடாது. 

சில குறிப்பிட்ட ஆண்டுகளில் கிடுகிடுவென்று ஏறும். அடுத்த சில ஆண்டுகளுக்கு எந்த மாற்றமுமே இருக்காது. பிறகு மீண்டும் திடீரென்று விலை ஏறும். விலையேற்றத்தை ஒரு வரைபடமாக வரைந்து பார்த்தால், அது மாடிப் படிக்கட்டுகளைப் போல படிப்படியாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். 

எனவே வீட்டில் செய்யப்படும் முதலீடு நிச்சயம் லாபம் கொடுக்கும், அதற்கு கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்’ என்கிறார் காசா கிராண்டே பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்  நிறுவனரும், மேலாண்மை இயக்குநருமான

3.. விலை குறைவான வீடுகள், சொகுசு வீடுகள் இரண்டிற்கும் இடையில் விலை மட்டும்தான் வித்தியாசமா? வேறு என்னென்ன வித்தியாசங்கள் இருக்கின்றன?

பத்து அல்லது பன்னிரண்டு லட்சம் ரூபாயில் இருந்து தொடங்கி முப்பத்தைந்து லட்சம் வரையில் விற்கப்படுகிற வீடுகளை விலை குறைவான வீடுகள் என்று அழைக்கிறோம். அதற்கு மேல் விலையைக் கொண்ட வீடுகள் சொகுசு வீடுகள் (லக்ஸரி வீடுகள்) என்ற வகைப்பாட்டில் வருகின்றன. இரண்டிற்கும் இடையில் விலை மட்டும் வித்தியாசப்படவில்லை. திட்ட வடிவமைப்பு, கட்டுமானம் என்று பல விஷயங்களிலும் வேறுபாடுகள் இருக்கின்றன.

கட்டுமான நிறுவனங்களைப் பொறுத்தவரையில் இரண்டு வகை வீடுகளுக்கும் இடையில் தரத்தில் எந்த வித்தியாசமும் காட்டுவதில்லை. ஆனால் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் மரங்கள், சுவிட்சுகள், சுவருக்கு பூசுகின்ற வண்ணங்கள் ஆகியவற்றில் விலை வித்தியாசங்கள் இருக்கும். 

சொகுசு வீடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நவீன பொருட்களைப் பயன்படுத்துவோம். ஆனால் அதை விலை குறைவான வீடுகளில் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதில்லை.

விலை குறைவான வீடுகளுக்கும் சிறிய விழாக்களை நடத்துவதற்கான ‘பார்ட்டி ஹால்’ கட்டிக் கொடுக்கப்படுகிறது. ஆனால் அது ஒரு சாதாரணமான அரங்கமாக இருக்கும். அதே நேரத்தில், சொகுசு வீடுகளுக்கான பார்ட்டி ஹால் ஒரு நட்சத்திர விடுதிக்கான தன்மையோடு இருக்கும். 

இப்படி, இரண்டு வகை வீடுகளுக்கும் எல்லா வசதிகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் அந்த வசதிகளின் தன்மை மாறுபட்டிருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios