Asianet News TamilAsianet News Tamil

வீட்டுக் கடன் வாங்கும்போது இவ்வளவு விவரங்களை எச்சரிக்கையுடன் கவனிக்கணும்…!

Pay attention to such details when buying home borrowing ...!
Pay attention to such details when buying home borrowing ...!
Author
First Published Sep 18, 2017, 1:43 PM IST


சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என நினைப்பவர்களின்  எண்ணத்தை நனவாக்குவது வீட்டுக் கடன்தான். ஏனெனில், இன்றைக்கு வீடு விற்கும் விலையில் ஒரு தனிநபர் மொத்தப் பணத்தையும் கையில் வைத்துக்கொண்டு வீடு வாங்குவது என்பது முடியாத காரியம்.

எனவே, வீடு வாங்கும் கனவை நனவாக்குவதில் வீட்டுக் கடன் பெரும்பங்கு வகிக்கிறது. வீட்டுக் கடனுக்கான வட்டி நிலையான வட்டி (ஃபிக்ஸட் ரேட்), மாறுபடும் வட்டி (ஃப்ளோ ட்டிங் ரேட்) என இரு விதமாக இருக்கும்.

பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டுவசதி நிறுவனங்களில் நிலையான வட்டி விகிதம் என்பது 2, 3 வருடங்களுக்கு இருக்கும். அதன்பிறகு அப்போதுள்ள மாறுபடும் வட்டிக்கு மாற்றப்படும். ஆனால், தற்போது சில வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் நீண்ட காலத்துக்கு நிலையான வட்டிவிகிதத்தை அறிவித்துள்ளன. அதாவது, 10 வருடங்கள் வரை நிலையான வட்டியில் வீட்டுக் கடன் வழங்குகின்றன.

வீட்டுக் கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

மத்தியில் நிலையான ஆட்சி, நவம்பர் மொத்த பண வீக்க விகிதம் பூஜ்ஜியம், கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைவது, ஜிடிபி உயர்வு போன்றவற்றால் இனி வரும் காலத்தில் ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

வட்டி விகிதம் குறைக்கப்பட்டு, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்போது, ஃபிக்ஸட் வட்டியில் வீட்டுக்கடன் வாங்கியவர்கள், அதே  வங்கியில் மாறுபடும் வட்டி விகிதத் துக்கு மாற முடியாது என்பது முக் கியமான விஷயம். கடனை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் எனில், பாக்கி கடன் தொகையில் 2% அபராதம் கட்டவேண்டிய சூழல் உருவாகும்.

இந்தத் தொகையைக் கடன் வாங்கியவர் கையிலிருந்து கொடுக்க வேண்டும். இதன் விளைவாக, வட்டி மிச்சம் ஏற்படாமல் இழப்புதான் ஏற்படும். கூடவே, வேறு வங்கிக்குக் கடனை மாற்றும்போது மீண்டும் செயல்பாட்டு க் கட்டணம், லீகல் ஒப்பீனியன் சார்ஜ், சொத்தின் சந்தை மதிப்பைக் கணக்கிடுவதற்குக் கட்டணம் என பல கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

வட்டி விகிதம் குறைந்தால், மாறுபடும் வட்டி விகிதத்தில் இஎம்ஐ தொகை குறைவதற்கோ அல்லது கடனை முன் கூட்டியே முடிக்கவோ வாய்ப்புள்ளது.

ஆனால், நிலையான வட்டி விகிதத்தைத் தேர்வு செய்பவர்கள்  அந்த சமயத்தில் அதிக இஎம்ஐ தொகை செலுத்த வேண்டியிருக்கும்.

இந்தநிலையில், ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வாங்கியவர், தவணை சரியாகக் கட்டிவரும் நிலையில், வட்டி குறையும்போது வேறு வங்கிக்கு கடனை மாற்றப் போவதாக தன் வங்கியில் சொன்னால், அவர்கள் வட்டியைக் குறைக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு சில ஆயிரம் ரூபாயைக் கட்டணமாக வசூலிப்பார்கள்.  

தற்போதைய நிலையில், நிலையான வட்டி விகிதம் மற்றும் மாறுபடும் வட்டி விகிதத்துக்கு இடையேயான வட்டி வித்தியாசம் 0.5%, 1% அளவில் உள்ளது. இது நிலையான வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுக்க வைப்பதுபோல் இருந்தாலும், விரைவில் வீட்டுக் கடனுக் கான வட்டி விகிதம் குறையும் என் பதால், மாறுபடும் வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுப்பதே இலாபகரமாக இருக்கும்.  

Follow Us:
Download App:
  • android
  • ios