கடந்த 2 ஆண்டு காலமாகவே, சொத்துக்கள் வாங்குவதிலும் விற்பதிலும் தொய்வு காணப்பட்டது. விளைநிலங்களை வீட்டு மனைகளாக போட்டு விற்பது குறித்த யானை ராஜேந்திரனின் வழக்கு மற்றும் சிஎம்டிஏ அப்ரூவல் பிரச்னை என பல காரணங்களால் ரியல் எஸ்டேட் துறையில் தொய்வு ஏற்பட்டது.

பின்னர், சமீபத்தில் வெளியான ரியல் எஸ்டேட் குறித்த நீதிமன்ற தீர்ப்பிற்கு பின், தற்போது மீண்டும்  ரியல் எஸ்டேட் துறை சூடு பிடிக்க தொடகியுள்ளது. அவ்வாறு நிலத்தை வாங்கும் போதோ விற்கும்  போதோ, வகைபடுத்தப்பட்ட நிலங்களுக்கு தேவையான பட்டாவை ஆன்லைனிலே  சரிபார்த்துக்கொள்ளலாம்.

இணையதளம்

www.tn.gov.in என்ற  இணையதளத்தில்,இ- சேவை பிரிவு மாவட்ட அலுவலகங்கள் என்ற இணைப்பை  கிளிக் செய்து, பட்டா அல்லது சிட்டா எண் குறிப்பிடலாம். அல்லது சர்வே எண் அல்லது உட்பிரிவு ஏதாவது இருந்தால், அதனை குறிப்பிட்டு விவரங்களை  சர்பார்த்துக் கொள்ளலாம்.

சென்னையில் உள்ள சொத்து விவரங்களையும் சரிபார்த்துக்கொள்வது எப்படி ?

இதே போன்று சென்னையில் உள்ள அனைத்து சொத்து விவரங்களையும் ஆன்லைன் மூலமாகவே  தெரிந்துக் கொள்ளலாம்.அவ்வாறு தெரிந்துகொள்ள, முதலில் சான்றுகள் என்ற  ஆப்ஷனை  கிளிக்  செய்யவும், பின்னர் தாலுக்கவை தேர்வு செய்ய வேண்டும், பின்பு பிளாக் நம்பர், தெரு பெயர், சர்வே  மற்றும் உட்பிரிவு எங்களை குறிப்பிட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டால், சொத்தின் முகவரி,சர்வே எண்,உட்பிரிவு  எண், சொத்தின் அளவு என்ன, உரிமையாளரின் பெயர்  உள்ளிட்ட அனைத்தும் ஒரே இடத்தில் அமர்ந்தபடியே சரிபார்த்துக் கொள்ளலாம்.