வீடு கட்டனும் நினைச்சவுடனே சதுர அடிக்கு என்ன விலை? இது தான், எல்லா வீடு கட்டும் நபர்களும் கேட்கும் ஒரே கேள்வி.

முதலில் சில அத்தியாவசிய விசங்களை ஆராய்வோம்.

கட்டிடத்தின் (Plinth Area) சதுர அடி:

கட்டிடத்தின் வெளிப்புற நீளம் மற்றும் அகலம் கொண்டு பரப்பு கணக்கிடப்படும், வாகன நிறுத்தம் மற்றும் வெளிப்புற மாடிப்படி பரப்பில் பாதியே சதுர அடி.

குறிப்பு:

ஜன்னல் Sunshade, Balcony, அகலம் இரண்டு அடிக்கும் குறைவாக இருந்தால் பரப்பை கணக்கிடக் கூடாது.

சதுர அடியின் விலையை எப்படி மதிப்பிட வேண்டும்?

ஒரு கட்டிடத்தின் மொத்தக்கட்டுமான செலவிற்கும் அதன் (Plinth Area) சதுர அடிக்கும் உள்ள விகிதம்.

குறிப்பு:

இதன் மதிப்பு ஒரே மாதிரியான Specification இருக்க வேண்டும்.

கட்டிடத்தின் விலை முறை கட்டிட ஒப்பந்தத்திற்க்கு சரியானதா?

இல்லை! இந்த கட்டிடத்தின் சதுர அடி விலை ஒரு தோரய மதிப்பீடு தானே தவிர, மிகச் சரியான மதிப்பிடு அல்ல, இது கட்டிடம் கட்டும் முன், வரைபடம் தயாரிக்கும் முன் சொல்லப்படும் தோரய மதிப்பீடு மட்டுமே.

ஒப்பந்தகாரர்கள் கட்டிடத்தின் சதுர அடி விலையில் வேலை செய்கிறார்களே அது எப்படி?

சில ஒப்பந்தகாரர்கள் முதலில் அவரது வேலையின் Specification கொடுப்பது இல்லை. அப்படியே கொடுத்தால் அவர்களது பரப்பளவு கணக்கிடும் முறையில் மற்றம் இருக்கும். அது கட்டிட வரைபடம் முடியும் முன் அல்லது பின் சதுர அடியின் விலை (Sqft Rate) மட்டுமே பேசப்படும். மொத்ததொகை சொல்லபடாது.

விலை மற்றும் பரப்பு கணக்கிடும் முறை முதலில் தெரிவிக்கப் பட்டிருந்தால், Finishing வேலை வரும் பொழுது Tiles, Wood போன்றவை கட்டிட உரிமையாளர் பொறுப்பு என்றும், வாங்கிக் கொடுத்தால் நாங்கள் பொருத்தி கொடுப்போம் என்றும் சொல்வார்கள்.

விலை, மற்றும் பரப்பை கணக்கிடும் முறை முதலில் தெரிவிக்கப்படா விட்டால் பொருட்களின் பொறுப்பு ஒப்பந்ததாரர் எனினும், பொருட்கள்
இன்றைய சந்தை விலையை விடக் குறைவாக இருந்து, வேலை நடக்கும் பொழுது விலை ஏறினால், விலை வேறுபாடு காரணம் தெரிவித்து. மேலும் பணம் வசூல் செய்வார்கள்.

கட்டுமான முறையில் பிறழ்வுக்கு உதாரணம்:

Roof Slab கணம் 5” (125MM)கொடுக்கப்படும். ஆனால், உங்கள் கட்டிடத்திற்கு 6” (150MM) கணம் தேவைப்பட்டால் அதிகப் பணம் வசூல் செய்யப்படும் அல்லது 5” (125MM) கணம் போட்டு விடுவர். அது தவறான கட்டுமான முறை.