ஆர்எம்சியின் (READY MIX CONCRETE) நன்மைகள்

1. ஒரே சீரான, ஒரே பதமுள்ள மற்றும் உறுதி செய்யப்பட்ட நல்ல தரமான கான்கிரீட் கிடைக்கிறது.

2. கான்கிரீட் கலவை வடிவமைப்பில் ஓர் தளர்வு அல்லது சுதந்திர போக்கு கிடைக்கிறது.

3. மாற்று பொருட்களின் உடன் சேர்க்கைக்கான வசதி உள்ளது.

4. அதிக விரைவான மற்றும் துரிதமான கட்டுமானம் உருவாக வாய்ப்புள்ளது.

5. பணியிடத்தில் அடிப்படை பொருட்களை சேகரித்து வைப்பதில் உள்ள இடப்பற்றாக்குறைக்கு விடுதலை.

6. பணியிடத்தில் தேவையான இயந்திரங்களை வாங்கி நிறுத்தி வைப்பது அல்லது வாடகைக்கு எடுப்பது என்கிற நடைமுறை நீக்கப்படுகிறது.

7. அடிப்படை பொருட்கள் வீணாவது தடுக்கப்படுகிறது.

8. கான்கிரீட் தயாரிப்பில் ஈடுபடுத்தப்படும் அதிக எண்ணிக்கை தொழிலாளர்கள் நீக்கப்படுகின்றனர்.

9. பணியிடத்தில் கான்கிரீட் தயாரிப்பதற்கு அதிக நேரம் ஆகிறது. இது மிச்சப்படுகிறது.

10. ஒலி மற்றும் தூசி முதலான மாசு குறைகிறது.

11. பணியிடத்தில் வேலைகள் ஓர் ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்படுகிறது.

12. கான்கிரீட்டின் கலவை மற்றும் அதன் பொருட்களின் அளவு துல்லியமாக இருக்கிறது.

13. சிமெண்ட், மணல், ஜல்லி, தண்ணீர் ஆகிய பொருட்களின் தரம் துல்லியமாக கட்டுப்படுத்தப்படுகிறது.

14. கலக்கும் தரம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. ஏனெனில், இதில் மனித தவறு இல்லை.

15. தரக்கட்டுபாடு மிக துல்லியமாக ஒரே இடத்தில் நடைபெறுகிறது.

16. மூலப் பொருட்களை மோசமான முறையில் சேகரித்து வைத்தல்

17. சூழ்நிலையின் பாதிப்பினால் அவற்றின் தரம் குறைவது தடுக்கப்படுகிறது.

18. அதிகமான உயரத்திற்கு கான்கிரீட் பம்ப் செய்ய ஏதுவாக இருக்கிறது. இல்லையென்றால் தரையிலிருந்து அந்த உயரத்திற்கு சாரம் கட்டி ஏற்பாடு செய்ய வேண்டும்.

19. கான்கிரீட் தானாகவே மட்டப்படுத்தப்படுவதால் சமமான தரை ஏற்படுவதில் சுலபம்.

20. பணியிடத்தில் இருக்கும் வேலைகளின் நேரத்தில் மிச்சமும், குறைவும் உண்டாகிறது. மோசமான தொழில் முறைகளால் உண்டாகும் கலக்கல், மோசமான பணியிடம் மற்றும் சேமிப்பிடம் ஆகிய காரணங்களால் உண்டாகும்