விற்பனையாளர்கள் மூலம் வாங்குவதற்குக் கிரயப் பத்திரம் மூலம் சொத்து மாற்றம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு கிரயப் பத்திரத்துக்கான முத்திரைத் தாள் மற்றும் பதிவு கட்டணம் அப்பத்திரம் பதிவுசெய்யும்போது செலுத்தப்பட வேண்டும்.

கிரயப் பத்திரத்தில் விற்பனையாளர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகள் டிஜிட்டல் பத்திரப் பதிவு துறையின் மூலம் எடுக்கப்படுகின்றன. சில மாநிலங்களில் சாட்சிகளின் புகைப்படமும் கிரயப் பத்திரத்தில் இடம் பெறுகிறது.

கிரயப் பத்திரத்தில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள்:

  1. வரி முறையாகச் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். முத்திரைத் தாள், வரைவோலை அல்லது இ-ஸ்டாம்பிங் முறை மூலம் முத்திரை வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
  2. , வாங்குபவர் கையோப்பம் இடம் பெற வேண்டும். 2003-க்கு முன் விற்பனையாளர் கையொப்பம் மட்டும் கிரயப் பத்திரத்தில் இடம் பெற்றிருக்கும்.
  3. பத்திரத்தில் எந்த ஒரு நிபந்தனையும் குறிப்பிட்டிருக்கக் கூடாது.
  4. பத்திரத்தில் ஒரு வேளை விற்பனையாளாரின் சொத்து உரிமையில் பிற்காலத்தில் ஏதாவது பிரச்சனை எழுந்தால் தகுந்த நட்ட ஈடு வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் என்று கிரயப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.
  5. விவரம் தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
  6. பத்திரத்தில் விற்பனையாளருக்கு அச்சொத்து வந்த முறை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
  7. வேளை பவர் பத்திரம் மூலம் கிரயப் பத்திரம் பதிவுசெய்யும்போது முகவருக்குக் கிரயம் செய்யும் அதிகாரம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் முதன்மையாளர் பவர் பத்திரத்தை ரத்து செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  8. போல் முதன்மையாளர் உயிருடன் உள்ளாரா என்பதையும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.