Asianet News TamilAsianet News Tamil

ஏப்ரல் 7ஆம் தேதி செக்..! : குஷி ஆவார்களா ரியல் எஸ்டேட் அதிபர்கள்..?

enquiry about real esate postponed on april 7
enquiry about-real-esate-postponed-on-april-7
Author
First Published Mar 28, 2017, 4:57 PM IST


விவசாய நிலங்களை வீட்டு  மனைகளாக  போட்டு விற்கப் படுவதை தடுக்க வேண்டும் என  கோரி ,சமூக ஆர்வலர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி,அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளில் இடம் வாங்கியவர்கள் வீடுகள் கட்டவும், அதனை விற்கவும் தடை விதித்திருந்தார்.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத மனைகளை பற்றி விரிவான அறிக்கையையும், வகைபடுத்தப்பட்ட சரியான நிலங்களை கண்டறியும் வகையில் அறிக்கை தாக்கல் செய்ய  தமிழக   அரசிடம்  உயர்நீதிமன்றம்  கேட்டுக் கொண்டது .

பின்னர் தமிழக அரசு தாக்கல்  செய்த  அறிக்கையை தொடர்ந்து , தற்போது , இந்த வழக்கு நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் மற்றும் திக ராமன் அடங்கிய முதலாவது அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அதன்படி,

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை வாங்கிய தனிநபர்கள், தங்கள் இடங்களை விற்பனை செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது.இதை வரவேற்கலாம். ஏனெனில் தனி இடம் வாங்கியவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான் . ஆதலால், இவர்கள் வாங்கிய  வீடுமனைகளை  விற்பதற்கு ஒரு வாய்ப்பு  ஏற்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு செக் ?

ஆனால், அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை வாங்கியாவர்கள், இனி அதற்காக அங்கீகாராம் வாங்குவது  என்பது  குதிரை கொம்பு தான். அவ்வாறு வாங்கப்பட்டு, அதில் ஒரு வேளை வீட்டு மனைகள்  போடப்பட்டு விற்கப்பட்டிருந்தால் இதில்  வீடு கட்டவும்  முடியாது,  விற்கவும் முடியாது  என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து,  இது குறித்த முக்கிய  முடிவுகள் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதியன்று  உயர்நீதிமன்றம்  அறிவிக்கும்  என  எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் பாதிக்கப்பட்ட சாதாரண  மக்களுக்கு தகுந்த வழிகாட்டுதல்கள் கொடுக்க வேண்டும் எனவும்  உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் .   

Follow Us:
Download App:
  • android
  • ios