Asianet News TamilAsianet News Tamil

உலர் சுவர் எனும் ட்ரை வால்: சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் இதை எப்படி செயல்படுத்துவது?

Dry wall how can it be done to reduce environmental damage?
Dry wall how can it be done to reduce environmental damage?
Author
First Published Jul 3, 2017, 1:21 PM IST


உலர் சுவர் (ட்ரை வால்) எனும் தொழிற்நுட்பத்தை 1917-ஆம் ஆண்டிலேயே கண்டுபிடித்து விட்டார்கள். இந்தியாவில் இப்போதுதான் இது சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

உலர் சுவர் (ட்ரை வால்) செயல்படுத்துவது எப்படி?

உலர் சுவர் அமைக்கும் முறையைப் படிப்படியாகக் கவனிக்க வேண்டும். முதல் கட்டமாக ஜிப்சம் உப்பை எடுத்துக் கொண்டு அதைச் சூடேற்ற வேண்டும். நன்கு அரைக்கப்பட்ட நிலையில் ஜிப்சம் இப்படி வறுத்து எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு சூடேற்றும்போது ஜிப்சம் உருகி இளகி ஒரே கட்டியாக உருமாறும். இந்த மாற்றம் நிகழும்போது அதிக அளவு கரியமில வாயு வெளிப்படும்.

இது புவி வெப்பமயமாவதை விரைவுபடுத்தும் நடவடிக்கையாக இருக்கும். இந்த வகையிலான கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்யும் போக்கு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இவ்வாறு ஏற்படும் சுற்றுச் சூழல் மாசைக் குறைப்பதற்கு உலர் சுவர் முறை பெரிதும் கை கொடுக்கிறது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் சன்னிவேல் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் சீரியஸ் மெட்டீரியல்ஸ் என்ற நிறுவனம் எக்கோராக் என்ற கட்டுமானப் பொருளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதை உற்பத்தி செய்வதற்கு வெப்பம் வேண்டியதில்லை.

மூலப் பொருட்களையும் முதன் முறையாக வெட்டி எடுத்துப் பயன்படுத்த வேண்டிய தேவை குறைவு. பயன்படுத்தப்பட்ட பொருட்களையே மறுசுழற்சி செய்தும் பயன்படுத்தலாம். தேவைப்படாத, தொழிற்சாலைக் கழிவுகளையே 85% வரை மூலப் பொருளாக எடுத்துக் கொள்ளலாம். எரிசாம்பல், உலைக்களத் தூசி, கசடு, ஆலைக் கழிவுகள் போன்றவற்றையே மூலப் பொருளாகப் பயன்படுத்தலாம். இவற்றைத் தண்ணீருடன் கலந்து அச்சுக்களில் வார்த்துத் தகடு வடிவில் உற்பத்தி செய்யலாம்.

இதற்கு எந்த விதத்திலும் வெப்பம் தேவைப்படாது. வழக்கமான கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் மின்சாரத்தில் ஐந்தில் ஒரு பகுதி இருந்தாலே போதும். எவ்வளவு மிச்சம் பாருங்கள். ஜிப்சம் பலகைகளைத் தயாரிப்பவர்கள் ஜிப்சத்தை அரைத்துச் சூடேற்றி அதனுடன் செல்லுலோஸ், ஸ்டார்ச் ஆகிய தாவர அடிப்படையிலான பொருட்களைக் கலப்பார்கள்.

இவை பலகைகளில் இடம் பெற்றிருப்பதை அந்துப் பூச்சிகளும் கறையான்களும் எளிதில் மோப்பம் பிடித்துவிடும். அரித்துத் தின்று விட ஆரம்பிக்கும். எக்கோ ராக்கில் இது மாதிரியான பொருள் எதுவும் இல்லவே இல்லை. எனவே, இதைக் கொண்டு உருவாக்கப்படும் பகுதிகளில் கறையான் தின்று ஓட்டையாகும் கோளாறு ஏற்பட வழி இருக்காது. பூஞ்சை படராது. பாதுகாக்க வேண்டிய அவசியம் குறைவு. பராமரிப்புச் செலவும் அதே அளவுக்குக்  குறையும்.

அமெரிக்காவில் இந்த உலர் சுவர் மூலப் பொருட்களால் கிட்டும் நன்மைகளை வெகுவாக உணர்ந்திருக்கிறார்கள். வட அமெரிக்காவில் மட்டுமே இந்த வகையில் 85 பில்லியன் சதுர அடி உலர் சுவர்களை உற்பத்தி செய்து பயன்படுத்துகிறார்கள் என்றால் பாருங்களேன்.

கட்டுமானச் செலவை குறைக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கும் நமக்கு இது மிகவும் தேவைதான்.

Follow Us:
Download App:
  • android
  • ios