Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்கு பண வரவு எக்கச்சக்கமாய் கூட வேண்டுமா? இந்த வாஸ்து பரிகாரம் உதவும்…

Do you have too much cash? This vatap solution will help ...
Do you have too much cash? This vatap solution will help ...
Author
First Published Sep 4, 2017, 12:23 PM IST


பணம் சம்பாதிப்பது ஒரு திறமை என்றால், அதைவிட பணத்தைசேமித்து வைப்பதும் ஒரு பெரிய திறமை.  பணவரவை அதிகரிக்கும் எளிய வாஸ்து பரிகாரம்

கடினமாக உழைத்து சம்பாதித்த பணம், பெட்டியில் அதிகநாள் தங்குவதில்லை. இன்னும் சிலருக்கு அதிகநேரம் கூட தங்குவதில்லை. எப்படியோ, எந்த விதத்திலோ பணம் ஐஸ்கட்டி போல கரைந்துவிடுகிறது.

எதனால் இப்படி? இதற்கு தீர்வு இருக்கிறதா? என வாஸ்து சாஸ்திர ரீதியாக ஆராய்வோம்.  

வீட்டின் ஈசான்ய பகுதிஎனப்படும் வடகிழக்கில் பீரோஅமைத்தால் பணம் தங்காது.ஈசானியம் என்பது தண்ணீர்இருக்க வேண்டிய இடம்.அதனால் இந்த ஈசான்யத்தில்பணம் வைத்தால் சம்பாதித்தபணத்தை ஆற்றில் போட்டகதைதான்.

அதுபோல, அக்கினி மூலையில் பீரோ அமைப்பதும் நல்லதல்ல.அக்கினி மூலை என்பதுநெருப்புக்குரிய பகுதி. நெருப்பில்இட்ட பொருள் யாவும் ‘சுவாகா’ஆவதுபோல, பணம் எப்படிகரைந்தது என கணக்கு பார்க்கமுடியாத அளவில் செலவுஏற்படும். முக்கியமாக மருத்துவசெலவுகளுக்கு பணம் செலவாகும்.ஒரு மருந்து கடை வைக்கும் அளவிற்கு மருந்துகள் வாங்குவதற்கேபணம் சரியாக இருக்கும்.

“சரிப்பா.. பணத்தை எப்படியோ கஷ்டப்பட்டு சம்பாதித்து வீட்டுக்கும்வந்துவிட்டேன். இந்த பணத்தை வாஸ்துபடி எந்த பீரோவில்தான்வைப்பது?” என நீங்கள் கையில் பணத்தை வைத்துக்கொண்டுகுழப்பத்துடன் நீங்கள் நிற்பது எனக்கு புரிகிறது.

அதற்கு நம் விநாயகப் பெருமான் வழிகாட்டுகிறார்.திருக்கோயில்களில், கன்னி மூலையில் (தென்மேற்கு) வீற்றிருக்கும்விநாயகர், “கன்னி மூலை கணபதி” என்றே அழைக்கப்படுகிறார்.தடைகளை நீக்கி, நல்லவை வளர செய்யும் அவர் விரும்பும் பகுதியேகன்னி மூலை எனப்படும் தென்மேற்கு பகுதியாகும். அதனால்,கன்னிமூலை என்று சொல்லக்கூடிய நிருதி மூலை அதாவதுதென்மேற்கு பகுதி பீரோவில் பணம் வைத்தால் விபரீத செலவுகள்,தேவையற்ற செலவுகள் ஆகியவை குறையும்.

தென்மேற்கில் அமைந்த பீரோவை, கிழக்கு நோக்கியோ அல்லதுவடக்கு நோக்கியோ வைக்க வேண்டும். பணம் வைக்கும் பீரோவில்எந்த தோஷமும் அண்டாமல் இருக்க, மஞ்சள் துண்டை விநாயகராகபாவித்து வைக்க வேண்டும். ஸ்ரீமகாலஷ்மி படத்தை பீரோவின் உள்ளேஒட்டி வைக்கலாம். இதனால் மங்கள காரியங்கள் செய்ய  போதியபணம், நகை சேரும்.

அதுபோல, தினமும் அன்றாட செலவுக்கு பணம் எடுப்பதாக இருந்தால்,தென்மேற்கு பீரோவில் இருந்து பணம் எடுப்பதை விட, வாயுமூலைஎனப்படும் வடமேற்கில் சிறிய அலமாரி அமைத்து, அதிலே கொஞ்சம்பணம் வைத்து தினசரி செலவுகள், அவசர செலவுகளுக்கு பணம்எடுப்பதே நல்லது.

அந்த அலமாரி கிழக்கு நோக்கி அமைக்கலாம். இடம் இல்லாதபட்சத்தில் வடக்கு சுவற்றில் அலமாரி அமைத்து, தெற்கு நோக்கியும்வைக்கலாம். இதனால், அன்றாட செலவுக்கு திண்டாட்டம் இல்லாதஅளவில் பண வரவு சிறப்பாக இருக்கும்!

Follow Us:
Download App:
  • android
  • ios