மகிழ்ச்சியாக வாழும் மக்கள் இருக்கும் நகரத்தின் பட்டியலில் சென்னைக்கு நான்காவது இடம்.

தென் இந்தியர்களை விட மிகவும் மகிழ்சியாக வட இந்தியர்கள் வாழ்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

எல்.ஜி நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட சர்வேயின் மூலம் இந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது. இந்த சர்வே மொத்தம் 16 மாநிலங்களில் வசிக்கும், பொருளாதார அடிப்படையில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 150 மக்களிடம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. 

இதில் மகிழ்ச்சியாக வாழும் மக்களின் சதவிகிதம் அதிகம் இருக்கும் நகரமாக சண்டிகர் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இரண்டாவது லக்னோ மற்றும் மூன்றாவது இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லி இடம் பிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் தமிழகத்தின் தலைநகரம் சென்னனை இடம் பிடித்திருக்கிறது. பெங்கரூளு ஐந்தாவது இடமும், பாட்னா ஆறாவது இடமும், பூனே ஏழாவது இடமும் வகிக்கின்றன.

இந்த சர்வேயில் தெரிய வந்திருக்கும் மிக முக்கியமான விஷயம், 35-45 வயதுள்ள மக்கள் 18-24 வயதுள்ள மக்களை விட சந்தோஷமாக இருக்கிறார்கள்.

35-45 வயதுள்ளவர்களின் மகிழ்ச்சி குறியீடு 103 சதவிகிதமாக இருக்கிறது.

18-24 வயதுள்ளவர்களின் சந்தோஷ குறியீடு 58 சதவிகிதமாக இருக்கிறது.