சமூக வலைத்தளத்தில் மழைக் காலக் காளான் போல் தோன்றியவர் வீடியோ புகழ் மாரிதாஸ்,  திடீரென ஆஹா ஓஹோவென முன்னேறி தற்போது சத்தமில்லாமல் இருப்பவர் சமூக வலைதள புகழ் மாரிதாஸ்...  யூடியுப் வீடியோக்களில் இவர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்  மற்றும் அக்கட்சியனர் மீது  சில ஊழல் புகார்களை  கூறி அதன் மூலம் பாஜக, மற்றும் சில வலதுசாரி எண்ணம் கொண்டவர்கள் மத்தியில் ஒரளவுக்கு பிரபலமானார். அதே நேரத்தில்  இவர் சொல்லும் குற்றச்சாட்டுகள் மற்றும்  உப்பு ஊறுகாய்க்கு உதவாத சில புள்ளிவிவரங்கள் என எதற்குமே  அடிப்படை ஆதாரங்கள் இல்லை . அனைத்துமே திட்டமிட்டு பரப்பப்படும் அபத்த குப்பைகள் என்கிறது திமுக. 

திமுவுடன் , மே 17 இயக்கம் ,   நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை விமர்சித்து வந்த மாரிதாஸ் ,  ஒரு கட்டத்தில்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ,  மற்றும் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான  கமல் உள்ளிட்டோரையும் தாறுமாறாக வாய்க்கு வந்தபடி  விமர்சித்து வருகிறார் . ஏதோ  வானத்தில் இருந்து இறங்கிய தேவ தூதரை போல எதிரில்  பட்டவர்களை எல்லாம்  விமர்சித்து உபதேசம் செய்யும் இந்த மாரிதாஸ் யார்.?  இவரின் பின்னணி என்ன.? இத்தனை ஆண்டுகள் இவர் எங்கிருந்தார் திடீரென எப்படி வந்தார்.? 

என பல கேள்விகள் உள்ளது.   இதுவரையில் யாருக்கும் தெரியாது சாதாரணமாக யூடியூப்,  ட்விட்டர்,  என சமூகவலைதளத்தில் கருத்துச் சொல்லி வந்த  மாரிதாஸ்,   களத்திற்கு வந்து மக்களோடு மக்களாக இருந்து  மக்களின் ஆதரவை பெற்ற தலைவர்களைக் கூட, எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு தரமற்ற வார்த்தைகளாலும் ஆதாரமற்ற தரவுகளாலும்  சேற்றை  வாரி   இறைத்து கொடுக்கும் பில்டப்  சாமானியர்களையும் எரிச்சலைடைய வைத்துள்ளது. 

இவர் செய்யும் அத்தனையும்  யாரையோ குளிர்விக்க என்பதும், அவரின் நடவடிக்கைகளால் இவரின் உண்மை முகம் என்ன என்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வர தொடங்கியுள்ளது. " எதிரிக்கு எதிரி நண்பன்" என்பதுபோல இவர் கூறும் சில கருத்துக்களுக்கு சிலர் ஆஹா ஓஹோ என சொல்வதைக் கேட்டு தன்னை ஒரு ''சோ'' ரேஞ்சுக்கு  பில்டப் கொடுக்கிறார்  என அவரை ஆதரிப்பவர்களே இப்போது  விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.  சில  யூடியூப் சேனல்கள்  மற்றும் தொலைக்காட்சிகள்  இவரைப் பேட்டிக்கு அணுகினால் சினிமா வெளிச்சத்தின் உச்சத்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், அஜித்குமார் போன்றோரெல்லாம் ஒன்றுமில்லை என  சொல்லும் அளவிற்கு பந்தா காட்டுகிறார்.

 

சுமார் 150 கோடி இந்திய மக்களின் ஒரே பிரதிநிதியான பிரதமர் மோடியை விட தன்னை பெரிய ஆள் என நினைத்துக் கொண்டுள்ள மாரிதாஸ் ,  சுற்றி உள்ளவர்கள் மத்தியில் செய்யும்  அலப்பறைகளுக்கு  அளவே இல்லை என்கின்றனர் அவரை ஆதரிப்பவர்கள்.   இப்போதெல்லாம் அவரிடத்தில் பேட்டிக்கு அனுகினால் அவர் சொல்லும் ஒரே பதில் ,  என்னுடைய லேகோவை வைத்து மட்டுமே பேட்டி கொடுப்பேன் .  அப்படி பேட்டி கொடுத்தாலும் முதலில் கேள்விகளை அனுப்புங்கள்  பின்னர் கேள்விக்கு பதில் கூறுவது பற்றி யோசிக்கிறேன் என்கிறாராம் .  உலகப் புகழ்பெற்ற தமிழ் தலைவர்களான ஜெயலலிதா கருணாநிதி ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கிறார் மாரிதாஸ் என  ஊடகங்கள் பொருமுகின்றன.  யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்க முடிந்த மாரிதாஸால்  ஊடகங்கள் கேட்கும் கேள்விக்கு ஏன் பதில் சொல்ல முடியவில்லை என்கின்றனர்.

 

மொத்தத்தில் இவர் யார்,  இவரது பின்னணி என்ன ,  மக்களுக்காக இவர் செய்தது என்ன.?  இவர் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் எங்கே.   அறிவாளி போல தன்னை காட்டிக் கொள்ளும் இவரின் அறிவுத்திறன் என்ன என்பதுபோன்ற எந்த  கேள்விக்கும் யாரிடமும் பதில்  இல்லை. அவரைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே உள்ளன.   அதேபோல  இவர் சொல்லும் சில கருத்துக்கள் இவரின் சொந்த கருத்துக்கள்தானா,  இவர் சொந்தமாகத்தான் பேசுகிறாரா அல்லது மற்றவர்கள் எழுதிக் கொடுக்கும் கருத்துக்களை பேசுகிறாரா.? என்ற சந்தேகங்களும்  மாரிதாஸ் மீது உண்டு.  

இவர் பல லட்சம் தொண்டர்களை கொண்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களை சகட்டுமேனிக்கு, வாய்க்கு வந்தமாதிரியெல்லாம் பேசி,  ஒரு நான்கு வீடியோக்களை போட்டு  அதில் பிரபலமாகி விட்டதால் தற்போது  ஊருக்கே உபதேசம் செய்யும் யோக்கிய சீலர் தான்தான்  என்ற ரேஞ்சுக்கு அவர் செய்யும் அலப்பறைகள் கொஞ்சம் ஓவர் என்கின்றனர் அவரைப் பற்றி நன்கு விவரமறிந்தவர்கள்.