சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் அதிகாரப்பூர்வ இல்லம் முன்பு ஜூன் 29 அன்று ராய்ப்பூரில் தற்கொலைக்கு முயன்ற 27 வயது இளைஞர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவரது மரணம் குறித்து அரசு சொல்லும் காரணம் முன்னுக்கு பின்னாக அமைந்துள்ளது. என் கணவர் மனநிலை சரியில்லாதவர் என்று சொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாது.பொருளாதார கஷ்டம் ஏற்பட்டதால் மனஅழுத்தத்தில் இருந்தார். என்று அவரது மனைவி பேட்டியளித்து வருகிறார்.

“தம்தாரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளைஞர்  ராய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று ராய்ப்பூர் போலீஸ் சூப்பிரண்டு அஜய் யாதவ் கூறினார்.

ஆரம்பத்தில், இளைஞர் ராய்ப்பூரின் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் பின்னர் அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அவர் 50% தீக்காயங்களுக்கு ஆளானதாக போலீசார் தெரிவித்தனர்.மூன்று முறை சத்தீஸ்கர் முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவருமான ராமன் சிங்... 'பாகேல் தலைமையிலான மாநில அரசின் தவறான நிர்வாகமே இளைஞரின் உயிரிழப்புக்கு காரணம்.தவறான நடத்தை, தவறான நிர்வாகம் மற்றும் காங்கிரஸின் மோசமான கொள்கை ஆகியவை மாநில இளைஞனைக் கொலை செய்துள்ளன. பூபேஷ் பாகேல் அரசாங்கம் இளைஞனை மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி என்று அழைப்பதன் மூலம் தீயினால் வெந்தரின் காயங்களுக்கு உப்பு தெளித்தது. என்று முன்னாள் முதல்வர் சிங் காட்டமாக ட்வீட் செய்துள்ளார்.

அந்த இளைஞர் தனது சொந்த கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை வைத்திருப்பதாகவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டம் (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ), 2005 திட்டத்தின் கீழ் வேலை அட்டை வைத்திருப்பதாகவும்,அவர் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ திட்டத்தின் கீழ் மே மாதம் 11 நாட்கள் பணிபுரிந்தார், மேலும் யூடியூப் படம் தயாரிப்பதற்காக தனது கிராம பஞ்சாயத்துக்கு ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தார் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். 

அரசாங்கம் அந்த இளைஞர் மனநிலை சரியில்லாதவர் என்று சொல்லி வரும் நிலையில் இறந்தபோன இளைஞரின் மனைவி என் கணவர் மனநிலை சரியில்லாதவர் கிடையாது..“நாங்கள் ஒரு கடுமையான நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளோம், இதன் காரணமாக எனது கணவர் மிகவும் கவலையாக இருந்தார். அவர் மனரீதியாக நிலையற்றவர் அல்ல. என தெரிவித்திருக்கிறார்.