சமீபத்தில் பிற ஜாதிப் பெண்களைத் திருமணம் செய்வோம் என்று அம்பேத்கர் படம் முன்பு சிலர் உறுதி மொழி எடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மற்றொரு வீடியோ தற்போது மற்றொரு வீடியோ வைரலாகியுள்ளது.

கடந்த 23 ம் தேதி டிக்-டாக்  ஆப் மூலம்  வீடியோ ஒன்று வெளியானது. அதில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி  பற்றி ஒரு இளைஞர் அவதூறாக பேசியிருந்தார். அதில் மொத்தம் 3 வீடியோக்கள் உள்ளன. 

இந்த வீடியோவில் உள்ள இளைஞர் பெயர் வினோத் 19.  அவர் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்.  இவர் அந்த வீடியோவில் ஒரு பக்கம் அம்பேத்கரை புகழ்ந்து பேசியிருக்கிறார். அன்புமணி பற்றி அசிங்க அசிங்கமாகவும், கேட்க முடியாத வார்த்தைகளால் கீழ்தரமாகவும், வன்னியர் ஜாதியை பற்றி தவறாகவும் பேசியுள்ளார். 

காது கொடுத்து  கேட்கமுடியாதவாறு,  மிகவும் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். " மேலும் இந்த வீடியோவில், என் போன் நம்பர் இதுதான், முடிஞ்சா வந்து பிடி பார்க்கலாம், நான் புளியந்தோப்புலதான் இருக்கேன், என பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறார். 

இந்த வீடியோவை பார்த்த  பாமகவினர் அதிர்ச்சியில் உள்ளனர். ஆபாசமாக பேசிய வினோத் என்பவரின் இணையதள முகவரியை கண்டறிந்த பாமகவினர், இளைஞர் குறித்த பல விவரங்களை திரட்டி கொடுத்து, இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும்படி புளியந்தோப்பு போலீசாரிடம் புகார் அளித்தனர்.

பாமகவினர் கொடுத்த புகார் அடிப்படையில் அந்த இளைஞரை கைது செய்த புளியந்தோப்பு போலீசார், அவர் மீது கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.