மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் ஓர் இளைஞர் மேடை  ஏற்றி,  'உனக்கு மோடி 15 லட்சம் வழங்கினாரா' என்று கேட்டார்.அந்த இளைஞன் தைரியமாக மேடையில் ஏறி ' மோடிஜி சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி, பயங்கரவாதிகளை அழித்தார் என சொல்ல திக் விஜய் சிங் திக்குமுக்காடிப்போனார்.

மத்தியப் பிரதேசத்தின் போபாலில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங். போபாலில் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், கூடியிருந்த இளைஞர்களை நோக்கி, 'உங்களுக்கு மோடி 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தாரா?' எனக் கேட்டார்.

அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல ஒரு இளைஞர் கையை தூக்கி நான் சொல்கிறேன் என சொன்னதும்… திக் விஜய் சிங் அவரை வா... வா… என்று மேடைக்கு அழைத்தார்.

எங்க அக்கவுண்ட்ல ரூ.1 கூட வுழலீங்க என்று அந்த இளைஞர், கதறுவார் என நினைத்து, மைக்கை  இளைஞரிடம் நீட்ட, அப்போது அந்த இளைஞர், 'மோடி ஜி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தி பயங்கரவாதிகளைக் அழித்தார்' என்று முதல் வார்த்தைதான் சொன்னார். அதற்குள் சுதாரித்துக்கொண்ட  திக்விஜய் சிங், படக்கென்று அந்த இளைஞரிடம் இருந்து மைக்கைப் பிடுங்கி துரத்திவிட, காங்கிரஸ் குண்டர்கள் ஓடி வந்து, அந்த இளைஞரை கீழே இறக்கி விட்டனர்.