தங்கையை காதலித்த ஒரு குற்றத்துக்காக,  காதலித்தவரை கத்தியால் குத்திக் கொன்று சடலத்தை மயானத்தில் எரித்துக் கொன்ற தம்பி உள்ளிட்ட அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகர்கோவிலை அடுத்த கரியமாணிக்கபுரத்தில் உள்ள ஒரு மயானத்தின் எரியூட்டு மையத்தில் உடலில் வெட்டுக்  காயங்களுடன், முகத்தில் அறுக்கப்பட்டு உள்ளிட்ட  எரிந்து கருகிய நிலையில் சடலம் கிடந்தது. மயான பக்கம் சென்ற சில பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சடலத்தை கைப்பற்றி பிரேதப பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் வள்ளியூரில் ஸ்டுடியோ வைத்திருந்த ரஜினிகுமாரை காணவில்லை என வள்ளியூர் போலீஸ் ஸ்டேஷனில் பதிவாகியிருந்த நிலையில் இறந்தவரின் அங்க அடையாளங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு போலீசார் அவர் ரஜினிகுமார் தான் என உறுதிப்படுத்தினர்.

ரஜினிகுமாரின் செல்ஃபோனை போலீசார் ஆய்வு செய்த போது பெருமாள் புரத்தை சேர்ந்த கேதீஸ்வரன் என்பவர் கடைசியாக அவரிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து கேதீஸ்வரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதலில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய கேதீஸ்வரன் பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து, கொலை செய்ததை  ஒப்புக் கொண்டார். மனைவியை விவாகரத்து செய்த ரஜினிகுமார், கேதீஸ்வரனின் அக்கா அனுஷாவை காதலித்ததாகவும், இது கேதீஸ்வரனுக்கு பிடிக்காமல் போனது விசாரணையில் தெரியவந்தது.

பலமுறை எச்சரித்தும் ரஜினிகுமார் கேட்காததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கேதீஸ்வரன் கூறியுள்ளார். இதையடுத்து கேதீஸ்வரன், தனது நண்பர்களுடன் சென்று  ரம்ஜான் விருந்து வைப்பதாக கூறி ரஜினிகுமாரை காரில் அழைத்துச் சென்றதும், காருக்குள் வைத்து சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் மயானத்தில் உடலை எரித்துவிட்டு தப்பிச் சென்றதாக கேதீஸ்வரன் கூறியுள்ளார்.