Asianet News Tamil

தேர்தல் அறிக்கையில் சொன்னீங்களே செஞ்சீங்களா... திமுக அரசை போட்டுத் தாக்கும் அன்புமணி ராமதாஸ்..!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

You said in the election manifesto... Anbumani Ramadas attacking the DMK government for not fulfilling the promise..!
Author
Chennai, First Published Jun 13, 2021, 9:48 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தமிழகத்தில் கொடைக்கானலில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டுள்ளது. இதனையடுத்து தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதிபடி, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தொட்டுள்ளது. கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.95க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.91.64 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வு மக்களைக் கடுமையாக பாதிக்கும்! கலால் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32.90 ரூபாயும், டீசலுக்கு 31.80 ரூபாயும் மத்திய அரசு வசூலிப்பதுதான் விலை உயர்வுக்குக் காரணம். தமிழக அரசின் வரியையும் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.58.28, டீசலுக்கு ரூ.50.13 வரியாக வசூலிக்கப்படுகிறது. இது நியாயமல்ல!

தமிழ்நாட்டில் மாநில அரசின் மதிப்புக் கூட்டுவரியாக பெட்ரோலுக்கு ரூ.25.38 (34%), டீசலுக்கு ரூ.18.33 (25%) வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசு வரியில் மாநில அரசின் பங்கையும் சேர்த்து தமிழக அரசுக்கு முறையே ரூ.39.19, ரூ.31.68 வருமானமாகக் கிடைக்கிறது! பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. மக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.10 வீதம் மொத்தம் ரூ.20 குறைக்க முன்வர வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் வெலியுறுத்தியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios