Asianet News TamilAsianet News Tamil

" இந்த விஷயத்தில் நீங்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்" ... பிதமர் மோடிக்கு இபிஎஸ் எழுதிய அவரச கடிதம்..!!

மீனவர்களின் படகுகளை விடுவிக்காமல் இருக்கும் மிகவும் நூதன நடவடிக்கையை இலங்கை கடற்படை கையாண்டு வருகிறது. இதுபோன்ற நடவடிக்கை தமிழக மீனவர்கள் இடையே மிகப்பெரிய விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

You have to pay special attention to this matter" ... EPS urgent letter written to Pitamar Modi .. !!
Author
Chennai, First Published Dec 18, 2020, 9:58 AM IST

இலங்கை கடற்படையில் சிக்கியுள்ள 37 தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-  தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து 5 இயந்திர படங்களுடன் மீன்பிடிக்க சென்ற 36 இந்திய மீனவர்களை கடந்த 14ஆம் தேதியன்று இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற சம்பவங்கள் குறித்து தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். 

You have to pay special attention to this matter" ... EPS urgent letter written to Pitamar Modi .. !!

மீனவர்களின் படகுகளை விடுவிக்காமல் இருக்கும் மிகவும் நூதன நடவடிக்கையை இலங்கை கடற்படை கையாண்டு வருகிறது. இதுபோன்ற நடவடிக்கை தமிழக மீனவர்கள் இடையே மிகப்பெரிய விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற நிலையில் ஐந்து இயந்திரம் படகுகளுடன் 37 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்  சென்றுள்ள சம்பவங்கள் இப்போது மீண்டும் நிகழ்ந்துள்ளது. 

You have to pay special attention to this matter" ... EPS urgent letter written to Pitamar Modi .. !!

எனவே தாங்கள்  உடனடியாக மீனவர்களை விடுவிக்க வெளியுறவுத் துறை உயர் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios