Asianet News TamilAsianet News Tamil

வாரிசு அரசியலை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.. JP.நட்டாவுக்கு சரியான பதிலடி கொடுத்த RS.பாரதி..!

பல வாரிசுகளை உருவாக்கி- அவர்களை சட்டமன்ற- பாராளுமன்ற உறுப்பினர்களாக்கி- நாடு முழுவதும் வாரிசு அரசியலைச் செய்து வரும் பாஜக. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சி ஆட்சியைப் பற்றி “வாரிசு அரசியல்” என்று கூறுவது வெட்க கேடானது. பாவம்- அவருக்கு எதை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வது என்று புரியவில்லை. 

You have no right to talk about succession politics... RS.bharathi retaliated against nadda
Author
Tamil Nadu, First Published Nov 26, 2021, 7:16 AM IST

தமிழ்நாடு மக்கள் திமுகவிற்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்து விட்டார்களே என்ற ஆதங்கத்தில்  ஜே.பி.நட்டா இப்படி அபாண்டமாக குற்றச்சாட்டை அள்ளி வீசியிருக்கிறார் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

திருப்பூரில் நேற்று முன்தினம் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசுகையில்;- ''குடும்ப ஆட்சிக்கு, அரசியலுக்கு எதிரான கட்சி பாஜக மட்டுமே. திமுக கட்சி தமிழக மக்களின் கலாச்சாரம், பண்டிகையை மாற்ற முயல்கிறது. குடும்ப அரசியலால் ஜனநாயகத்திற்குப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  நான் எதையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. மிகத் தெளிவான உண்மையைச் சொல்கிறேன். 

You have no right to talk about succession politics... RS.bharathi retaliated against nadda

நீங்கள் காஷ்மீரிலிருந்து ஆரம்பித்து தென் இந்தியா வரை எடுத்துக்கொள்ளுங்கள் மேற்கு வங்கம், தென்பகுதியில் ஆந்திரா, தெலுங்கானா, சென்னை இங்கெல்லாம் குடும்ப கட்சிகளைக் காணலாம். இந்த குடும்ப அரசியலால் ஜனநாயகத்திற்குப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு பாஜகதான் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜே.பி.நட்டாவின் பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்து பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா “வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என்று “திமுக ஊழல் ஆட்சி நடத்துகிறது” என்று குற்றம் சாட்டியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தனது கூட்டணிக் கட்சியிலிருந்தே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை சேர்ப்பதை திசை திருப்பி- எங்கே நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அந்த கூட்டணியும் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் நேர்மையாகவும், மக்களின் நலனுக்காகவும் மட்டுமே நடைபெறும் திமுக ஆட்சியைப் பார்த்து குறை கூறுவது வியப்பளிக்கிறது.

You have no right to talk about succession politics... RS.bharathi retaliated against nadda

பல வாரிசுகளை உருவாக்கி- அவர்களை சட்டமன்ற- பாராளுமன்ற உறுப்பினர்களாக்கி- நாடு முழுவதும் வாரிசு அரசியலைச் செய்து வரும் பாஜக. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சி ஆட்சியைப் பற்றி “வாரிசு அரசியல்” என்று கூறுவது வெட்க கேடானது. பாவம்- அவருக்கு எதை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வது என்று புரியவில்லை. எந்த வழியில் பொய் பிரச்சாரம் செய்தாலும்- தமிழ்நாடு மக்கள் திமுகவிற்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்து விட்டார்களே என்ற ஆதங்கத்தில் அவர் இப்படி அபாண்டமாக குற்றச்சாட்டை அள்ளி வீசியிருக்கிறார்.

You have no right to talk about succession politics... RS.bharathi retaliated against nadda

பத்தாண்டு காலம் அரசு நிர்வாகத்தை பாழ்படுத்தி- ஊழல், நிர்வாக சீர்கேடு என தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திய அதிமுகவை அருகில் வைத்துக் கொண்டு “நிர்வாகம்” குறித்து திமுகவிற்கு பாடம் எடுக்க முயற்சி செய்திருக்கிறார் ஜே.பி. நட்டா. திமுக ஆட்சி இருந்த போதெல்லாம் தமிழ்நாடு எத்தகையை முன்னேற்றம் கண்டது என்பதன் அடையாளம் தான் அத்தனை சதிகளையும் முறியடித்து தமிழ்நாடு மக்கள் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு அளித்த மாபெரும் வெற்றி. அதை நட்டா உணர வேண்டும்.

பாஜக தேசியத் தலைவர் நட்டாவின் “நிர்வாக சீர்கேடு” குற்றச்சாட்டு எத்தகையது என்பதை நாம் பதில் சொல்வதை விட இன்றைய இந்து ஆங்கில நாளிதழில் 2 ஆம் பக்கத்தில் அவருடைய செய்தியைப் பிரசுரித்து- அதிலேயே “நிர்வாக சீர்கேடு என்பதற்கு நட்டா எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை” என்று முன்னுரை கொடுத்து பிரசுரித்துள்ளது- நட்டாவின் பொய் குற்றச்சாட்டு புறப்பட்ட இடத்திலேயே வீழ்ந்து விட்டது. அவரது பேச்சுக்கு ஆதாரம் இல்லை என இந்து பத்திரிக்கையே பட்டவர்த்தனமாக கூறிவிட்டது.

You have no right to talk about succession politics... RS.bharathi retaliated against nadda

மழை வெள்ள சேதங்களை தினமும் பார்வையிட்டு- மக்களுக்கு நிவாரணம் வழங்கி- பணிகளை முடுக்கி விட்டு முதலமைச்சர் எங்கள் தளபதி மட்டுமே. அப்படியொரு முதல்வர் பாஜக ஆளும் மாநிலங்களிலேயே இல்லை என்பதை ஏனோ நட்டா வசதியாக மறந்து விட்டது வேதனையளிக்கிறது. ஆகவே நல்லாட்சி வழங்கி- தமிழ்நாட்டு மக்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடிச் சென்று பணியாற்றும் முதலமைச்சரைக் கொண்ட திமுக ஆட்சியைப் பார்த்த அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நட்டா பேசுவது- தன் கட்சி முதுகில் இருக்கும் அழுக்கை மறைக்கவா- அல்லது விவசாயிகளின் போராட்டத்திற்கு தொடக்கம் தொட்டே திமுகவின் ஆதரவும், போராட்டங்களும், ஆட்சிக்கு வந்த உடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களும் காரணமாக அமைந்து விட்டதே என்ற ஆதங்கமா என்று புரியவில்லை. ஆகவே நட்டா அரசியல் விழாக்களுக்கு வரும் போது “பொய் மூட்டைகளை” அவிழ்த்துக் கொட்டுவதை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios