பஞ்சாப் மாநில காங். பொது செயலாளர் யோகிந்தர் திங்ரா பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

பஞ்சாப் மாநில காங். பொது செயலாளர் யோகிந்தர் திங்ரா பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரசுக்குள் எழுந்த கோஷ்டி சண்டை பாஜக மத்தியில் இப்போது சிரிப்பாய் சிரிக்கிறது. சித்துவுக்கும், அம்ரீந்தர் சிங்குக்கும் ஏற்பட்ட மோதல் வேறு ரூபத்தில் காங்கிரசை ஆட்டம் காண வைத்திருக்கிறது.

அம்மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் அம்ரீந்தர் சிங். இவருக்கும் சித்துவுக்கும் முட்டிக் கொள்ள அந்த பக்கம் முதலமைச்சர் பதவியை ராஜினாமா பண்ணி அதிர்ச்சி தந்தார் அம்ரீந்தர் சிங். அதே நேரத்தில் இந்த பக்கம் சித்து தமது பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தூக்கி வீசி காங்கிரசுக்கு அதிரடி காட்டியிருக்கிறார்.

அடுத்தடுத்து நிகழும் அரசியல் திருப்பங்கள், குழப்பங்களினால் காங்கிரஸ் முகாம் கலகலத்து கிடக்கிறது. நிலைமை இப்போது சீரியஸ் கண்டிஷனுக்கு போய்விட 2 நாளில் அமைச்சர் பதவி ஏற்ற பெண் ராஜினாமா செய்து உள்ளார்.

புதிய முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னியின் அமைச்சரவையில் 2 நாட்கள் முன்பு தான் ரசியா சுல்தானாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. சித்து காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்ய.. சூட்டோடு சூடாக அவருக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் பதவியை தூக்கி வீசியிருக்கிறார் ரசியா சுல்தானா.

அமைச்சர் ஒரு பக்கம் ராஜினாமா பண்ணி அதிர்ச்சி கொடுக்க, பஞ்சாப் மாநிலத்தின் பொது செயலாளர் யோகிந்தர் திங்ரா ராஜினாமா செய்து அதிர்ச்சி வைத்தியம் பண்ணியிருக்கிறார். தொடர்ந்து நிகழும் இந்த அரசியல் குழப்பங்களினால் காங்கிரஸ் தலைமை கலங்கி கிடக்கிறது என்பதே உண்மை…!