Yogi dityanath
அமைச்சர்களைத் தொடர்ந்து அதிகாரிகளும் சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும்…. யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி
உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் அனைவரும் 15 நாட்களுக்குள் தங்களது சொத்துக் கணக்குகளை வெளியிட வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், தற்போது உயர் அதிகாரிகளும் 15 நாட்களுக்குள் தங்களது சொத்துக் கணக்குகளை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக அரசு பதவியேற்றுக் கொண்டது. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். அவருடன் 2 துணை முதலமைச்சர்களும், 46 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டதும் தனது அதிரடி நடவடிக்கைளை தொடங்கியுள்ளார். ஊழல் இல்லாத வெளிப்படையான அரசை நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைத்து அமைச்சர்களும் 15 நாட்களுக்குள் தங்களது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
அதிரடி பேச்சுக்கு பெயர்போன யோகி ஆதித்யநாத்தின் இந்த நடவடிக்கை உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்த அதிரடியாக உத்தரபிரதேசத்தில் உள்ள அதிகாரிகள் அனைவரும் அடுத்த 15 நாட்களுக்குள் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
