டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா  பிரசாரத்துக்கு இடையில் கட்சித் தொண்டர்  ஒருவரின் வீட்டில் இரவு உணவு உட்கொண்டது பாஜக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் நெக்ழிச்சியையும் ஏற்படுத்தியுள்ளது .  பாஜகவில் அதிக செல்வாக்கு மிகுந்த தலைவராக உள்ள அமித்ஷா  ஒரு சாதாரண தொண்டன் வீட்டில் உணவு சாப்பிடும் புகைப்படம்  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .  டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது . 

காங்கிரஸ் ,  ஆம் ஆத்மி ,  பாஜக என டெல்லியில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது .  நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென மத்தியில் ஆளும் பாஜக அரசு  தீவிரம் காட்டி வருகிறது .   டெல்லி பாஜக ஆட்சியின் கட்டுப்பாட்டில் வந்து விட்டாள் தங்கள் கொண்டு வரும் திட்டங்களுக்கு அது சாதகமாக இருக்கும் என்பதால் டெல்லியை  கைப்பற்றும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது . இதற்காக பலவிதமான தேர்தல் வியூகங்களை வகுத்துள்ள பாஜக சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளது.   மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு மிகுந்த பிதரமர் மோடி மற்றும்  அமித்ஷா ஆகியோர் டெல்லியில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . 

இந்நிலையில் நேற்றிரவு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , பிரச்சாரத்திற்கு  இடையில் திடீரென  மனோஜ் குமார் என்ற பாஜக தொண்டரின்  வீட்டிற்கு வந்து  இரவு உணவை உட்கொண்டார் .  அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது .  சாதாரண குறுகலான ஒரு அறையில் அமர்ந்துள்ள அமிர்ஷா  சப்பாத்தி டால் எனப்படும் பருப்புக் குழம்பு சாப்பிடுவது போன்ற காட்சி அதில் இடம்பெற்றுள்ளது .  அப்போது அவருடன் டெல்லி பாஜக தலைவர்  மனோஜ் திவாரியின் தொண்டர் வீட்டில் உணவு அருந்தினார் .  இரண்டு தலைவர்களும் சாதாரண கட்டிலில் அமர்ந்து தொண்டர் கொடுத்த உணவை ருசித்து சாப்பிட்டது அப்பகுதி பாஜகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .