ஆமாம் நான் கொக்குதான்.. நிரூபித்து விட்டார் ஆளுநர்.. பொறி கிளப்பும் மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபாலன்.
சிம்லாவில் நடந்த சபாநாயகர்கள் மாநாட்டிலும் சபாநாயகர் அப்பாவு தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில்தான் அந்த தீர்மானம் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது. தீர்மானத்தை ஆளுநர் 1ஆம் தேதியை சட்டசபை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால் 3 ஆம் தேதி வரை அது குறித்து எந்த தகவலையும் மாநில அரசு வெளியிடவில்லை.
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா என ஆளுநரை விமர்சித்து முரசொலி கட்டுரை எழுதிய நிலையில், நீட் விலக்கு தீர்மானத்தை திருப்பி அனுப்பி ஆமாம் நான் கொக்குதான் என்பதை ஆளுனர் நிரூபித்து விட்டார் என டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் விமர்சித்துள்ளார். மீண்டும் ஒரு முறை அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதை அனுப்பினாலும் ஆளுநர் இன்னும் பல மாதங்களுக்கு அதை காலம் தாழ்த்துவார் என அவர் கூறியுள்ளார்.
திமுக கூட்டணி கட்சிகள் எச்சரித்ததை போலவே ஆளுநருக்கும்- தமிழக முதல்வருக்கும் இடையேயான மோதல் வலுத்துள்ளது. தமிழக ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டபோதே அவரின் நியமனத்திற்கு திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காவல்துறை பின்புலம் கொண்ட ஒருவரை தமிழக ஆளுநராக நியமிப்பதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியதுடன், முதல்வர் ஸ்டாலினுக்கு இடையூறு செய்வதற்கே ஆர்.என் ரவியை பாஜக நியமிக்கிறது என்றும் அக்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் இந்த விவகாரத்தில் எந்த எதிர்வினையும் ஆற்றாது தமிழக முதல்வர் ஸ்டாலின், பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்த்தாலும் ஆளுநர் என்பவர் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி நியமிக்கப்பட்டவர் என்பதால் தமிழக முதல்வரே நேரில் சென்று ஆளுநரை வரவேற்றார். அதைத்தொடர்ந்து ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையேயான உறவு சுமுகமாக இருந்துவந்தது.
பாஜகவும் திமுக கூட்டணி கட்சிகளும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஆளுநர் தமிழக முதல்வரை மனம் திறந்து பாராட்டி வந்தார். அது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆனால் ஆளுநர் விவகாரத்தில் ஆரம்பம் முதலிருந்தே பட்டும்படாமலும் இருந்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின், நீட் விவகாரத்தில் ஆளுநர் பாராமுகமாக இருந்து வருகிறார் என்பதையும், தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்பதையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் உறுதியாகவே இருந்து வருகிறார்.தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளாநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் காட்டமாக அறிக்கைவிட்டு தனது நிலைபாட்டை உறுதி செய்தார் ஸ்டாலின்.
அதன் தொடர்ச்சியாக சுதந்திர தின விழாவில் உரையாற்றிய ஆளுநர், பிறமாநில மாணவர்களைப் போல தமிழ்நாட்டு மாணவர்களும் பிற மொழியை பயில வேண்டும், நீட்டுக்கு முந்தைய காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை காட்டிலும் நீட் தேர்வுக்கு பின்னர் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்ற தொனியில் பேசினார். அவரின் இந்த பேச்சு கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. அதைத் தொடர்ச்சியாக நீட் விலக்கு கோரி தமிழக அரசு ஆளுநர்கு அனுப்பிய சட்ட மசோதாவையில் நீண்ட காலதாமதத்திற்கு பிறகு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இது தமிழக அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்ட நவடிக்கை குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தப்பட்டு மீண்டும் ஓரு முறை தீர்மானம் நிறைவேற்றி அளுநருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் சிலந்து என்ற பெயரில் "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா" என்ற தலைப்பில் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அந்த கட்டுரை முழுக்க முழுக்க ஆளுநரின் நடவடிக்கைகளை விமர்சிப்பதாகவே இருந்தது. அதாவது கொங்கணவர் என்பவர் 11 சித்தர்களுள் ஒருவர் ஆவார். ஏராளமான நூல்களை எழுதியுள்ள அவர் போகரின் சீடர் என்றும் நம்பப்படுகிறது. ஒருமுறை கொங்கணவர் தவத்தில் இருக்கையில் மரக்கிளையில் அமர்ந்திருந்த கொக்கு ஒன்று அவர் மீது எச்சம் இட்டது, அதனால் கொங்கணவரின் தவம் கலைந்தது அப்போது அந்த கோபத்தில் கொங்கணர் அந்தக் கொக்கை பார்க்க, இது கருகி சாம்பலானது. நாம் பார்க்க கொக்கு கருகி விட்டதே என்ற கர்வத்துடன் அங்கிருந்து மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றார் கொங்கணர், அப்போது ஒரு பெண்ணிடம் பசிக்கு உணவு தருமாறு யாசகம் கேட்டார், ஆனால் கணவருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த அந்தப் பெண் தாமதமாகவே அவருக்கு உணவு கொண்டு வந்தார், அப்போது உனக்கு எவ்வளவு அலட்சியம் என கொங்கனர் அந்தப் பெண்ணை எரிப்பதை போல பார்த்தார்.
ஆனால் பெண்ணுக்கு எதுவும் ஆகவில்லை, அப்போது கொங்கணரை பார்த்து அந்த பெண் சிரித்தபடியே " கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா" என கேட்டதாக கதை உள்ளது. இதுதான் முரசொலி தலைப்பின் அர்த்தமும் கூட, அதாவது ஆளுநரின் அதிகாரம் தங்களை ஒன்றும் செய்துவிடாது ஆளுநர் தங்களை ஏதோ கொக்கு போல பாவிக்கக் கூடாது என்பது தான் அந்தக் தலைப்பின் உன் அர்த்தம். இந்நிலையில் நான் ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். அடுத்தடுத்து நடந்த இந்த சங்கிலி நிகழ்வுகளை தொடர்பு படுத்தி பலரும் பல வகைகளில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் முரசொலி கட்டுரைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆளுநர் நீர் மசோதாவை திருப்பி அனுப்பி இருக்கிறார் என கூறியுள்ளார் இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியின் முழு விவரம் பின்வருமாறு:- ஏற்கனவே நீட் விவகாரத்தில் ஆளுநருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையே மோதல் முற்றும் எனக் கூறியிருந்தேன், இப்போது அந்த மோதல் இரட்டிப்பாகும் நிலை உள்ளது.
ஜனவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்கு ராஜ்பவனில் இருந்து தீர்மானம் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது.மோட்டார் ரைடர் மூலம் அனுப்பப்பட்டு அது சபாநாயகரிடம் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் 3ஆம் தேதி மாலை 4 மணி வரையில் முதலமைச்சர் தரப்பிலிருந்து அது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அந்த மசோதாவை திருப்பி அனுப்பியது மட்டுமல்லாமல் ஆளுநர் 10 கேள்விகளையும் மாநில அரசுக்கு எழுப்பியுள்ளார். அந்த மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு முன்னர் இரண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் மட்டத்தில் இருப்பவர்களிடமும், இரண்டு சட்டவல்லுனர்கள் இடமும் ஆலோசனை பெற்றே ஆளுநர் அதை திருப்பி அனிப்பியுள்ளார். ஆனால்தான் இந்த மசோதா மீது முடிவெடுக்க ஐந்து மாத கால தாமதம் ஏற்பட்டது. செப்டம்பர் 13-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, பின்னர் அது ஆளுநருக்கு அனுப்பப்பட்டது, அதன்பிறகு தொடர்ச்சியாக அதன் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது, மாநில அரசின் சார்பில் அதிகாரிகள் மட்டத்தில் மற்றும் அமைச்சர்கள் மட்டத்திலும் ஆளுநரை சந்தித்து வந்தனர்.
மேலும், சிம்லாவில் நடந்த சபாநாயகர்கள் மாநாட்டிலும் சபாநாயகர் அப்பாவு தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில்தான் அந்த தீர்மானம் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது. தீர்மானத்தை ஆளுநர் 1ஆம் தேதியை சட்டசபை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால் 3 ஆம் தேதி வரை அது குறித்து எந்த தகவலையும் மாநில அரசு வெளியிடவில்லை. அதனால்தான் ஆளுநர் அதை பத்திரிகை செய்தியாகவும் வெளியிட்டார். அப்படியானால் அதை மறைக்க முயற்சி நடந்திருக்கிறது. அதாவது அரசியலில் இருந்து சட்டரீதியாக இதை நகரத்தார் முயற்சிக்கப்பட்டது, ஆனால் இப்போது மீண்டும் இது அரசியல் ரீதியாக வந்துள்ளது, அதற்கு பின்னணிக் காரணங்கள் சில உள்ளன முதலில் முரசொலியில் வெளியான கட்டுரை, முரசொலியில் சிலந்தி என்ற புனைபெயரில் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆதரவுடன் எழுதப்பட்ட கட்டுரையை கண்டு ஆளுநர் " ஆமாம் நான் கொக்கு தான்" என்று நிரூபித்து விட்டார். கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா என்ற தலைப்புக்கு ஆளுநர் பதிலடி கொடுத்துள்ளார். அதேபோல சட்டமன்றத்தை கூட்டுவதும் ஆளுநரின் கையில்தான் உள்ளது. மொத்தத்தில் முரசொலியில் கட்டுரை எழுதி ஆளுநரை திமுக சீண்டி விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.