Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர்கள் இல்லாமல் 4 முறை அமைச்சரவைக் கூட்டம்... கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு வந்த சோதனை!

அரசின் சார்பில் முக்கிய முடிவுகளை எடுக்கவும் திட்டங்களை அறிவிக்கவும் அமைச்சரவைக் கூட்டம் அவ்வப்போது கூடுவது வாடிக்கை. எடியூரப்பா முதல்வரான பிறகு இதுவரை 4 முறை அமைச்சர்கள் யாரும் இல்லாமலேயே அமைச்சரவைக் கூட்டத்தி நடத்தி முடித்துவிட்டார். இந்தக் கூட்டத்தில் தலைமை செயலாளர், அந்தந்த துறை சார்ந்த செயலாளர்கள் மட்டுமே பங்கேற்று முக்கிய முடிவுகளையும் திட்டங்களையும் எடியூரப்பா அறிவித்திருக்கிறார்.
 

Yediyurappa conducted cabinet meeting without ministers
Author
Bangalore, First Published Aug 18, 2019, 12:42 PM IST

கேபினட் அமைச்சர்களே இல்லாமல் 4 முறை அமைச்சரவைக் கூட்டம் நடத்தி ஒரே ஆளாக முடிவெடுத்து திட்டங்களை செயல்படுத்திவருகிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.Yediyurappa conducted cabinet meeting without ministers
 கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததையடுத்து குமாரசாமி கடந்த மாதம் 26 அன்று கர்நாடகாவின் முதல்வராகப் பொறுப்பேற்றார். அவர் மட்டுமே முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்கவில்லை. சட்டப்பேரவையின் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை கர்நாடகாவில் அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்கவில்லை.Yediyurappa conducted cabinet meeting without ministers
அரசின் சார்பில் முக்கிய முடிவுகளை எடுக்கவும் திட்டங்களை அறிவிக்கவும் அமைச்சரவைக் கூட்டம் அவ்வப்போது கூடுவது வாடிக்கை. எடியூரப்பா முதல்வரான பிறகு இதுவரை 4 முறை அமைச்சர்கள் யாரும் இல்லாமலேயே அமைச்சரவைக் கூட்டத்தி நடத்தி முடித்துவிட்டார். இந்தக் கூட்டத்தில் தலைமை செயலாளர், அந்தந்த துறை சார்ந்த செயலாளர்கள் மட்டுமே பங்கேற்று முக்கிய முடிவுகளையும் திட்டங்களையும் எடியூரப்பா அறிவித்திருக்கிறார்.Yediyurappa conducted cabinet meeting without ministers
எடியூரப்பா அமைச்சரவையில் அமைச்சர்களை நியமிக்க பிரதமர் நரேந்திர மோடியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் இரண்டு முறை எடியூரப்பா சந்தித்துவிட்டார். ஆனாலும், அமைச்சரவையை இறுதி செய்ய முடியாமல் எடியூரப்பா தவித்துவருகிறார். மேலும் எம்.எல்.ஏ.க்கள் பலரும் அமைச்சரவையில் இடம் பெற துடிப்பதால், அமைச்சரவையை இறுதி செய்வதில் தாமதமாகிவருவதாகக் கூறப்படுகிறது.Yediyurappa conducted cabinet meeting without ministers
அமைச்சரவை ஏற்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாலும், அமைச்சரவை கூட்டத்தை தனி ஆளாக எடியூரப்பா நடத்திவருவதாலும் காட்டமாகியுள்ள காங்கிரஸ் கட்சி, எடியூரப்பா அரசை கலைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. “தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் அமைச்சரவையில் அமைச்சர்கள் பதவியேற்காமல் ஒரு மாதத்துக்கும் மேலாக தனி ஆளாக முதல்வராக இருந்துள்ளார். ஏற்கனவே முன் உதாரணம் இருப்பதால், அதைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை” என்று பாஜக பதிலடி தந்துவருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios