மோடிஜி நாட்டின் பிரதமர், ஒரு கட்சியைச் சேர்ந்தவர் அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
"பாதுகாப்பு அரசியலாக்கப்படும்போது என்ன நடக்கிறது என்பதை எங்கள் குடும்பம் பார்த்திருக்கிறது" என்று ப்ரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், ‘’மோடிஜி நாட்டின் பிரதமர், ஒரு கட்சியைச் சேர்ந்தவர் அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்டதால் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு போன் செய்தேன். அதை முதல்வர் பிரடமரிடம் தெரிவிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி இந்த விவகாரத்தை அரசியல் பிரச்சினையாக்கியது, அரசியலமைப்பு பதவி குறித்து கேள்வி எழுப்பியது.

எனக்கு விளக்கமளிக்க முதல்வர் என்னை அழைத்திருந்தால், பாஜகவின் ஆட்சேபனை சரியாக இருந்திருக்கும். எனக்கு எந்த அரசியலமைப்பு பதவியும் இல்லை. உண்மை என்னவெனில், பிரதமரைப் பற்றி தொலைக்காட்சியில் பார்த்தபோது, நான் மிகவும் கவலைப்பட்டேன். பிரதமரின் பாதுகாப்பு குறித்து நான் மிகவும் கவலைப்பட்டேன். எங்கள் அரசாங்கம் எங்காவது தடுமாறிவிட்டதா என்பதை சன்னிஜியிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்பினேன். மோடி ஜி நாட்டின் பிரதமர், ஒரு கட்சியைச் சேர்ந்தவர் அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவரது பாதுகாப்பு நாட்டிற்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக முக்கியமானது.
பிரதமரின் பாதுகாப்பு விவகாரத்தை யாரும் அரசியலாக்கவோ அல்லது இலகுவாக எடுத்துக்கொள்ளவோ கூடாது. பாதுகாப்பு அரசியலாக்கப்படும்போது என்ன நடக்கிறது என்பதை எங்கள் குடும்பம் பார்த்திருக்கிறது. மாநில அரசிடம் ஏதேனும் மெத்தனம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். நான் விவரங்களுக்கு வர விரும்பவில்லை. எங்கள் அரசாங்கம் அதன் விளக்கங்களை கொடுத்துள்ளது. இப்போது உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. விசாரணை நடக்கட்டும், உண்மை வெளிவரும்.
2022 சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸுக்கு கேம் சேஞ்சர் ஆகுமா என்பது மார்ச் 10 அன்றுதான் தெரியும். ஆனால் தொகுதி அளவில் கட்சி அமைப்பை வலுப்படுத்த மிகவும் கடினமாக உழைக்கிறோம். இன்று, தொகுதி, கிராமம் மற்றும் பஞ்சாயத்து அளவில் எங்கள் கட்சி அமைப்பு வலுவாக உள்ளது என்பதை நான் பெருமையுடன் கூற முடியும்" என்று அவர் கூறினார். கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி உத்திரபிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை பட்டியலிட நேர்காணலை முடித்து விட்டது.
இது தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "வெறுப்பை தோற்கடிக்க இது சரியான நேரம் #Elections2022" என்று ட்வீட் செய்துள்ளார்.
