ராகுல் காந்தி அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்தாலும் வயநாடு தொகுதில் முதல்முறையாக 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று  உலகசாதனை படைத்துள்ளார்.

 

வயநாடு தொகுதியில் களமிறங்கிய அவர் 12 லட்சத்து 76 ஆயிரத்து 945 வாக்குகள் பெற்றார் ராகுல் காந்தி. அவரை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ கட்சி வேட்பாளர் பி.பி.சுனீர்  வெறும் 4 லட்சத்து 77 ஆயிரத்து 783 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

இதன் மூலம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்று இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இதுவரை யாரும் வெற்றி பெற்றதே இல்லை. 

ஒய்.எஸ்.ஆர் தாயார் புலிவந்துலா தொகுதியிலும், ராஜசேகர ரெட்டி கடப்பா தொகுதியிலும் 5 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் வெற்றி பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. அதனை 2019 மக்களவை தேர்தலில் முறியடித்துள்ளார் ராகுல் காந்தி. அவர் அமேதி தொகுதியில் தோல்வியை தழுவினாலும் வயநாடு தொகுதி ஆறுதலை அளித்துள்ளது.