இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் முதலிடம் பிடித்திருப்பது மகாராஷ்ட்ரா மாநிலம். இங்குள்ள மக்கள் தான் இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்களில் பரந்து விரிந்து கிடக்கிறார்கள். கொரோனா தொற்று காணரமாக முதல் ஊரடங்கு பிரதமர் மோடி அறிவித்த போது இந்த மாநிலத்தை சேர்ந்த மக்கள் கால்நடையாக நடக்க ஆரம்பித்தார்கள் அதில் பலர் மரணம் அடைந்த சம்பவம் எல்லாம் நடந்தேறியது. இதன் காரணமாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் .." இங்கிருந்து செல்லும் தொழிலாளர்கள் மற்ற மாநிலத்திற்கு சென்றால் அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும் என்று அறித்திருந்தார்.  

எனவே உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் பீஹார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு லட்சக் கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சென்றனர். சிறப்பு ரயில்களால் உ.பி.,க்கு திரும்பிய லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலைவாயப்பு இன்றி தவிக்கின்றனர் .இவர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லாமல் இருக்கவே முதல்வர் பல்வேறு வேலைவாய்ப்பு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து நபர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க உ.பி மாநில அரசு சில நடவடிக்கைகளையும், திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தேசிய கட்டுமான வளர்ச்சி கவுன்சிலுடன் உ.பி.,அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, உ.பி மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தவிர பல மாநில மக்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 26 ம் தேதி ஒரு கோடி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக ஒரே நேரத்தில் ஒரு கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முதல் மாநிலமாக உத்தரபிரதேசம் மாறும். மற்றும் ஊரடங்கு காலத்தில் மாநிலத்திற்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதன் மூலம் அதிக பலன் பெறுவார்கள்.பிரதமர் மோடியும் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.