மக்களவை- இடைத்தேர்தல் தொடர்பாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பில் திமுக கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது.
மக்களவை- இடைத்தேர்தல் தொடர்பாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பில் திமுக கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது. 
ஓவ்வொரு தேர்தலின் போதும் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் சார்பில் கருத்துக் கணிப்பு வெளியிடப்படும். லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் சார்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் மார்ச் 17ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை 21 ஆயிரத்து 464 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி தமிழக புதுச்சேரியில் உள்ள நாற்பது தொகுதிகளில் திமுக கூட்டணி மக்களவை தேர்தலில் 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், அதிமுக கூட்டணி 3 முதல் 5 தொகுதிகளில் வெற்றுஇபெறும் என்றும், அமமுக 1 முதல் 2 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் ஓரிரு தொகுதிகளில் இழுபறி நீடித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
அதேபோல் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 9 முதல் 11 தொகுதிகளிலும், அதிமுக 2 முதல் 3 தொகுதிகளிலும், அமமுக 1 முதல் 2 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இந்தத் தேர்தலில் பணம் பெற்று கொண்டு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் பணம் செலவளிப்பதை பொறுத்து தேர்தல் வெற்றி அமையும் எனவும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
