வரும் 31-ம் தேதி ரஜினிகாந்தின் புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியாவதில் எந்த சந்தேகமும் இல்லை என ரஜினி தரப்பு உறுதி செய்துள்ளது.

ரஜினி ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன நிலையில் மருத்துவமனை அறிவுறுத்தலின் படி, ரஜினிகாந்த் ஒரு வார காலத்துக்கு முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும்; கொரோனா தாக்கக் கூடிய சூழ்நிலைகளில் இருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தியிருந்தது. இதனால் ஏற்கனவே ரஜினிகாந்த் திட்டமிட்டபடி டிசம்பர் 31-ல் புதிய கட்சியின் பெயரை அறிவிப்பது சாத்தியம் இல்லை; கட்சி தொடர்பான ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கவும் வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது.

 

ரஜினி உடல் நிலை சரியில்லாத நிலையில் அவர் 31ம் தேதி தனது கட்சியை அறிவிப்பாரா? அரசியல் களம் காண்பாரா? என்பது சந்தேகமாகவே கருதப்பட்டது. இந்நிலையில் வரும் 31-ம் தேதி ரஜினிகாந்தின் புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியாவதில் எந்த சந்தேகமும் இல்லை என ரஜினி தரப்பு உறுதிப்படுத்தி உள்ளது.